பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி 1

279

செலுத்துவதே காவல் கடமையை ஒழுங்காகச் செய்வதற் காகவேயாம்.

ஆள்வோன் தன் நாட்டை, ஒரு தாய் தன் குழந்தையைக் காப்பது போல் காக்க வேண்டும் என்பது சங்கப் பாட்டு.

“காவல் குழவி கொள்பவரின் ஓம்புமதி”

என்பது அது (புறம். 5).

குழந்தையைக் கையால் எடுப்பதற்கே எத்தகைய தேர்ச்சி வேண்டும்! கைபோன போக்கில் தூக்கிவிட முடியுமோ? அதன் குடிப்பு, உணவு, மருந்து இவற்றில்தான் எத்தனை அக்கறை! அதன் பண்பாடு கல்வி எதிர்கால நலம் என்பவற்றில் தான் எத்தனை செயற்பாடுகள்! ஒரு குழந்தையை அழுதல், அரற்றுதல், ஏக்கம் தாக்கம் இல்லாமல் காக்க எத்தனை பாடுகள்! இவற்றை எண்ணினால் ஆட்சியாளன் கடமை வெளிப்பட விளங்கும்.

செம்மை போற்றும் அரசு, கொடுமைப் பக்கம்தான் பாராதும், கொடுமை செய்வாரைக் கண்காணித்து நலம் செய்தும் வருதல் வேண்டும் என்பதற்காக இறைமாட்சி, செங் கோன்மை, கொடுங்கோன்மை என்பவற்றைக் கூறிய வள்ளுவர் வெருவந்த செய்யாமை' என்றோர் அதிகாரமும் அமைத்தார். மக்கள் அஞ்சத்தக்க செயல்களைச் செய்யா திருத்தல் என்பது இதன் பொருளாம்.

வெருவந்த செய்யாமை

வாழவேண்டாம் என்று வாழ்வார் எவர்? இன்பமு நன்மையும் வேண்டாம் என்பார் எவர்? துன்ப நீக்கமும், இன்ப ஆக்கமும் தாமே வாழ்வின் நோக்கு. அவ்வாறாகவும் மக்க ளெல்லாம் அஞ்சி - அஞ்சி, நொடி நொடியும் சாகச் செய்வதாய் இரு ருக்கும் அரசும் ஓர் அரக ஆகுமோ? அவ்வரசை ஆள் வோனும் ஆள்வோனாக நீடிக்க வேண்டுமா?

-

குடிமக்கள் அஞ்சத்தக்க செயல்களைச் செய்கின்ற கொடிய ஆட்சியாளன் எனின், அவன் ஆட்சி அரைகுறையாக அன்று, முழுமையாகவே கெட்டொழியும்.

ஆட்சி மட்டுமா ஒழியும்? எங்களை ஆள்வோன் கொடியவன் என்னும் ஏக்கம் மக்களுக்கு உண்டாகி விடுமானால் ஆள்வோன் வாழ் நாளும் விரைவில் குறைந்து ஒழிந்து போவான்.