பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

இளங்குமரனார் தமிழ்வளம் 6

“தக்காங்கு நாடித் தலைச் செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து

குற்றவாளிகளுள் சிலர் அச்சமிக்கவராகவும், திருந்தத்

தக்கவராகவும், சூழ்நிலையில் குற்றத்துக்கு ஆட்பட்டவராகவும் இருப்பர். குற்றவாளிகள் அனைவரும் வன் கொடுமையானவர் என்றோ, திருந்தாத் தீயர் என்றோ எண்ணித் தண்டனை தரு தலும் ஆகாது. நோய்க்குத் தக மருந்தின் ஆற்றல் கூட்டிக் குறைத்துத் தருவது போல் தண்டனையும் தண்டனைக்கு ஆட் பட்டவர் நிலைக்குத் தக இருத்தல் வேண்டும்.

கடுமையான தண்டனை கிட்டும் என்று எண்ணம் உண்டாகுமாறு நடவடிக்கை இருத்தல் வேண்டும். அவ்வாறே தோற்றம் தந்து, மீண்டும் அக்குற்றம் செய்யாதிருக்கத் தக்க அச்சத்தை ஊட்டுதலும் வேண்டும். ஆனால் திருந்தி வாழத் தக்கார்க்குத் தகத் தண்டனை மென்மையாகவும் இருத்தல் வேண்டும். வாழ்வின் மதிப்பையும், குற்ற மொழிதலின் நோக்கை யும் கருதிய முறை ஈதாகும்.

66

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காது வேண்டு பவர்”

கண்ணோட்டம்

ஆட்சியாளர்க்கு வேண்டிய நற்குணங்களுள் ஒன்று கண் ணோட்டம் ஆகும். “தன் உறவினரும், நண்பரும், தன்னொடு பழகியவரும், தன்னொடு தொடர்புடையவரும் தனக்கு உதவின வரும், எளியவரும் ஆனவர்க்கு நன்மை செய்வதை மறுக்க முடியாத அன்பு" என்று கண்ணோட்டம் என்பதற்கு விளக்கம் தருவார் பாவாணர்.

கண்ணோட்டம் நடுவுநிலை தழுவியதும், நடுவுநிலை வழுவியதும் என இருவகைத்தாம். தன் நலம், தன் குடும்பம் தன் இனம், தன் கட்சி என்ற அடிப்படையில் அமையின் நடுவுநிலை வழுவிய கண்ணோட்டமாகும். அவ்வாறு அமையாதது-பிறர் நலங் கருதியது எனின் நடுவு நிலை தழுவிய கண்ணோட்டம் ஆகும்.

கண்ணோட்டம் என்னும் சிறந்த இயல்பு இருப்பதால் தான் உலகமே உள்ளது என்றும், அக்கண்ணோட்டம் இல்லாதவர் இருப்பது உலகுக்குப் பாரம் என்றும், கண்ணோட்டமில்லாத கண், கண் அன்று புண் என்றும், கண்ணோட்டமில்லாத கண்,