பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

திருக்குறள் ஆராய்ச்சி - 1

285

செய்வது என்றும் ஊழதிகாரத்துக் கூறியது இவண் எண்ணத் தக்கது. (இவ்வரிசையில் ஊழ் என்னும் சுவடியில் இவ்விரிவு ழ் காண்க)

ஒரு சில சார்புகளும் உள்நோக்கும் கொண்டு அமைச்சர் களைத் தேர்ந்து கொள்வதும் உண்டு. அத்தகையவரால் ஆக்கச் செயல் நிகழாமையுடன் அழிவுச் செயல்கள் பெரிதும் நிகழ்ந்து விடல் உண்டு. செயலாற்றும் திறமை இல்லாதவர் பலப்பலரை முறையாக ஆராய்ந்து பேசினாலும் கூடச் செயலைச் செம்மை யாகச் செய்து முடிக்க மாட்டாத வராகவே இருப்பர்.

“முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்

திறப்பாடு இலாஅ தவர்

(640)

ஓர் அரசுக்கு உட்பகையாகவோ, வெளிப்பகையாகவோ பல்லாயிரர் இருக்கலாம்; பலகோடியரும் இருக்கலாம். அவர் செய்கையின் விளைவைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலும், திறமும் ஆட்சிக்கு இருக்கவும் கூடலாம். ஆனால், ஆட்சிக்குள் ஓர் றுப்பாக இருந்து கொண்டு கெட்ட எண்ணம் உடைய ஓர் அமைச்சர் செய்யும் கேட்டைத் தீர்ப்பது என்பது மிகக் கடின மானது. ஆதலால் ஆட்சிப் பொறுப்புக்கு அமைச்சர்களை அமர்த்தும் போது மிக விழிப்பாக இருத்தல் வேண்டும். அவர் செயல் முறையைத் தவறாமல் கண்காணித்து வருதலும் வேண்டும். “பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி யுறும்" தெவ்வோர்-பகைவர்.

தூது

ஓர் ஆட்சி உறுப்புகளுள் தூது என்பதும் ஒற்று என்பதும் இட டம் ம் பெற்றிருத்தல் கட்டாயத் தேவையாகும். ஒவ்வொரு நாட்டிலும் தூதரகம் இருத்தலும், பல்வேறு ஒற்றர் பிரிவுகள் இருத்தலும் உலக நடைமுறை. சிக்கல்கள் வீட்டுக்கு வீடே உண்டு. ஆளுக்கு ஆளே உண்டு. எவ்வளவுதான் கற்றாலும் உலகியலறிவு பெற்றாலும் தான் தனது என்னும் சுருக்கம் வாராமல் இருப்பது அரிதாயிற்று. அந்நிலை இருக்குமளவும் சிக்கல் தனியாளிடமும் உண்டு; வீட்டளவிலும் நாட்டளவிலும் உலகளவிலும் உண்டு. அச்சிக்கல் தீர்வுக்கு ஒருவகையால் உதவுவது தூதும் ஒற்றுமாம். வ்விரண்டன் மேல் நடவடிக்கையாக அமைவது படையாகும். ஆதலால் இம்மூன்றையும் ஒவ்வொரு நாடும் தன் உறுப்பு