பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

1

287

தூதனுக்கு இன்றியமையாதவை சொல்வன்மை; அவை யறிதல்; அவை அஞ்சாமை; குறிப்பறிதல் என்பனவாம்.

சொல்வன்மையாவது செலச் சொல்லல் ஆகும். கேட்பவர் மனத்துப் பதியுமாறு சொல்லலும், அவர் அதனைப் பலப் பலரிடத்தும் சொல்லுமாறு சொல்லலுமாம். உள்ளங் கொள்ளச் சொல்லும் திறமை இல்லாக்கால், உண்மையானதும் கூட எடுத்துக் கொள்ளப் படாததாய்ப் போய் விடுதல் தெளிவு. தூதன் சொற்சோர்வு ஆட்சிச் சோர்வாகவும் கேடாகவும் முடிவதை எண்ணின் செலச் சொல்லல் சிறப்பு விளங்கும்.

"அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்”

என்று அவையறிதலும் (711)

"கற்றாருள் கற்றார் எனப்படுவார் கற்றார்முன்

கற்ற செலச்சொல்லு வார்’

என்று அவையஞ்சாமையும் (722) சொல்லப்படும்.

கூறாமை நோக்கிக் குறிப்பறிதல் (701), ஐயப்படாஅது அகத்தது உணர்தல் (702) குறிப்பிற் குறிப்பு உணர்தல் (703) என்று குறிப்புணர்தல் திறம் குறிக்கப்படும்.

ஒற்று

ஒற்று, வேவு, உளவு என்பன ஒரு பொருள் தரும் சொற்கள். வேறுபாடு தோன்றா வகையில் ஒன்றியிருந்து அறிவது ஒற்று எனப்படும். ஒன்றுபட்ட தன்மை ஒற்றுமை எனப்படுதல் அறிக. வெளிப்பட அறியாது அறிதலால் வேவு எனவும், உளவு எனவும் பெயர் பெற்றது.

திருக்குறளில் ஒற்றாடல் என்பதோர் அதிகாரம் (59). ஒற்றாளல் என்பது ஒற்றாடல் ஆயிற்று. கையாளல் என்பது கையாடல் என வழங்கப்படுகிறது அன்றோ!

ஆட்சியாளனுக்குத் தன்கண்மட்டும் போதாது. ஒற்றன் கண்ணும் தன் செவ்விய ஆட்சிக்கு உறுதுணையாக வேண்டும் என்பது வள்ளுவம் (571).

ஆட்சியாளன் ஒரு குறித்த இடத்தில் இருக்கலாம். ஆனால் அவன் ஆட்சி இடம் அவன் கண்பார்வையளவில் கட்டுப் பட்டது அன்றே! அங்கே, அங்கே நிகழ்வனவெல்லாம் அவன்