பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

இளங்குமரனார் தமிழ்வளம் 6

அறிந்து கொள்ளாக்கால், அறிந்து கொள்ள வாய்ப்பு இல்லாக் கால் அவ்விடத்து நல்லதும், அல்லதும் அறிந்து கொள்வது எப்படி?

நல்லது செய்யும் நன் மக்களே தம் செயலைத்தாமே வெளிப்படுத்த நாணி அமைவர்; அவர்கள் அறச்செயல்களும், ஆக்கச் செயல்களும் அறிந்து ஊக்கப்படுத்துதல் நாட்டுக்கு நலப்பாடாம். நல்லறிஞர் ஒருவர் இருப்பாரானால் அவர் தம்மைப் பறையறையார். அவரை அறிந்து கொள்ளல் நாட்டுப் பேறாம்.

இனி அல்லது செய்யும் மாந்தரோ தம்மை மறைத்தே கரவால் செய்வர். ஒருகால் அவரைக் கண்டு கொள்வார் சான்றாவர் எனின் அவரை ஒழிக்கவும் துணிவர். அந்நிலையில் பொது மக்கள் அனைவரும் அல்லது செய்வாரைக் காட்டிக் கொடுப்பர் என்று கூறுதற்கும் இயலாது.

நாட்டைக் கெடுக்கும் கேடுகள் பல. அவற்றுள் எவை எங்குத் தலைகாட்டினும் முளையிலேயே கிள்ளி எறிதல் வேண்டும். இல்லையேல் முள் மரம் போலவோ, நச்சு மரம் போலவோ வளர்ந்து தீமை செய்யும். ஆதலால் ஒற்றர் ஒரு நாட்டுக்கு மிகமிக இன்றியாமையாதவராவர்.

சொல்லி வைத்தாற்போற் கொள்ளை, வழிப்பறி, தீவைப்பு, கொலை, குண்டு வெடிப்பு இன்னவை நிகழ்கின்றன. வானூர்திக் கடத்தல் அளவும் கூட வளர்ந்து விட்டது. கட்டுக் காவலும், ஒற்றும், படையும் எல்லாம், எல்லாம் இருந்தும் நாட்டில் இத் தகைய அழிவுகள் என்னின் இவை இல்லாக்கால், இருந்தும் செயல்படாக்காமல் நாட்டு நிலை என்னாம்?

ஒற்றும் காவலும் சீராகச் செயல்படும் நாட்டில் குற்றம் செய்வாரும், குற்றம் செய்து தப்புவாரும் அரியர் ஆகிவிடுவர். துப்புத் துலக்கித் தருவதற்கெனவே சில நாடுகளில் தனியார் நிறுவனங்களும் செயல்பட்டு வருவதை அறியும் போது அதன் ன்றிமையாமை நன்கு வெளிப்படும்.

இராசராசன் காலத்திலே நிகழ்ந்ததொரு நிகழ்ச்சி. சுந்தர சோழன் மகன் ஆதித்த கரிகாலன் என்பான் கி.பி. 969 இல் சில வஞ்சகர்களால் கொல்லப்பட்டான். அச்செயலைச் செய்தோர் எவரென அந்நாளில் கண்டுபிடிக்கப்படவில்லை. சுந்தர