பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

இளங்குமரனார் தமிழ்வளம் 6

ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறிந்து கொள்ள முடியா வகையில் இயங்கச் செய்தல் வேண்டும். அத்தகைய ஒற்றர் மூவர் சொல்வன ஒன்று போல் இருப்பின் உண்மையெனக் கொள்ளல் வேண்டும் (589)

ஓர் ஒற்றனுக்குச் செய்யும் சிறப்பை மற்றோர் ஒற்றனோ, பிறரோ அறியா வகையில் செய்தல் வேண்டும். பிறர் அறியச் சிறப்புச் செய்யின் கமுக்கமாக இருக்க வேண்டிய செய்தி வெளிப்பட்டதாகி விடும் (590).

66

'ஒற்றொற்று உணராமை ஆள்க உடன் மூவர் சொற்றொக்க தேறப் படும்.’

“சிறப்பறிய ஒற்றின் கண் செய்யற்க செய்யின்

புறப்படுத்தான் ஆகும் மறை

وو

என்பவை எத்தகைய நுணுக்கமும் தேர்ச்சியும் மிக்க செய்திகள். இன்றும் போற்றிக் கொள்ளத் தக்கவை அல்லவோ!

நாடு

ஓர் உழவன் உழைப்பாளன் அல்லது உழைப்பிலி என்பதன் சான்று அவன் நிலபுலங்களே. அதே போல் ஓர் ஆட்சி செம்மை யானது அல்லது செம்மையற்றது என்பதைக் காட்டுவது நாடேயாம். ஆட்சிச் சிறப்பைக் காட்டுவது நாட்டுச் சிறப்பேயாம்.

“நாடு” என்பது விரும்பு என்னும் பொருளது. ஆராய்தல், தேடுதல் என்னும் பொருளும் தரும். ஒரு நல்ல நாட்டின் இலக்கணம் எவ்வாறு இருக்கும் என்பதை வள்ளுவம் வகுத்தும், தொகுத்தும் வளமாக உரைகின்றது. அதன் நிறைவிலே, எத்தகு வளநாடு எனினும் ஆட்சிச் செம்மை இல்லையேல் நாடாகாது என்று திட்டமாகக் கூறுகிறது.

குறையாத விளைவு, தகுதி வாய்ந்த பெரியவர், பெரு நலச் செல்வர் ஆகியோர் சேர்ந்திருப்பது நாடு (731).

மிகுந்த பொருள்களால் விரும்பத் தக்கதாகி தவிர்க்க முடியாக் கேட்டின் இடையேயும் மிகுதியாக விளைவது நாடு (732).

எவ்வளவு பாரம் வருமாயினும் அதனைத் தாங்கிக் கொண்டு ஆட்சிக்குச் செலுத்த வேண்டிய வரிவகைகளை முழுமையாகச் செலுத்தும் குடிகளைக் கொண்டது நாடு (733).