பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

திருக்குறள் ஆராய்ச்சி 1

17

இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கும் போது கேள்வி எனப்படும் செல்வமானது வேறு எந்த எந்தச் செல்வங்களுக்கும் உயர்ந்ததொரு செல்வமாகுமே அன்றிப் பிற செல்வங்களுக்கு ஒப்பானதாக மாட்டாது (411). அச்செல்வம் அடைவதற்குக் கைம்முதலாக வேண்டுவது ‘ஆர்வம்’ என்னும் ஒன்றுதானே! வேறென்ன இழப்பு உண்டு! இழப்பெதுவும் இல்லாமல் இணை யற்ற கேள்விச் செல்வத்தைப் பெறாமல், இழத்தல், அறிவாகுமா? இனம்

உன் நண்பனைச் சொல், உன்னைப் பற்றிச் சொல்லி விடுகிறேன்' என்பதொரு மேலை நாட்டுப் பழமொழி. நம் வள்ளுவரோ நட்பைப் பற்றி ஓரதிகாரமா கூறினார்? நட்பு, நட் பாராய்தல், பழைமை, தீநட்பு, கூடாநட்பு என ஐந்ததிகாரங்கள் ஒரு தொடராகக் கூறினார் (79 -83) பெரியாரைத் துணைக் கோடல், சிற்றினம் சேராமை என்பவற்றையும் வைத்தார். (45, 46) அறிவுடைமையை அடுத்தே குற்றங்கடிதலையும் (44) அதனை அடுத்தே இவற்றையும் வைத்தார். ஏனெனில் அறிவுடையார், தம் அறிவில் தாழாமல் அமைய வேண்டுமெனின் குற்ற மில்லாமல் திகழ வேண்டுமெனின்-பெரியாரைத் துணைக் கொள்ளவேண்டும் என்பதும் சிற்றினத்தினரைச் சேரலாகாது என்பதும் அறிவுறுத்தற்காகவே யாம்.

இனச் சார்பு

வளர்ந்த பெரியவர்களே இனச்சார்புக்கு ஆட்பட்டு விடுவர். சார்ந்ததன் வண்ணமாகி விடுவர். அவ்வாறாக வளர்ந்து வரும் இளைஞர், காளையர்; இளைஞையர், கன்னியர்-ஆகியவர் நிலை என்ன ஆகும். பதினகவைப் பருவத்தரை-குழந்தையரும் அல்லாத, வளர்ந்தவரும் அல்லாத இரண்டற்கும் இடைப் பட்ட பதினகவைப் பருவத்தரைப் பற்றிச் சொல்ல வேண்டியது இல்லை.

முதன்மை

பயிற்சிக் களத்திலேயே நல்ல நண்பரைத் தேர்ந்து கொள்ளல்வேண்டும். ‘முதல்வனாக இரு அல்லது முதல்வனோடு இரு' என்பது பழமொழி. முதன்மை என்பது கல்வி முதன்மை மட்டுமன்று; பண்பு முதன்மையும் குறிப்பதே. அத்தகைய மாணவரை நண்பாகக் கொண்டிருப்பின் அறிவும் பண்பும் ஒருங்கே சிறந்து விளங்க வகையுண்டாகும்.