பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

1

31

என்னும் வள்ளுவப்படி அன்பும் ஆர்வமும் நண்பும் படிப்படியே பெருகின் படிப்பைப் போலும் இன்பமும் உண்டோ?

பண்பாடு

தலைக் கூடல், பிரிதல் என்பவை வெற்றுக் கல்வியா? ஏட்டுக் கல்வியா? பண்பாட்டுக் கல்வி அல்லவோ! அவற்றை நடைமுறையில் கண்ணேரில் காணும் மாணவர்க்குக் கற்றோர் கடமையைப் பற்றி விரித்துச் சொல்லவேண்டுவ துண்டோ? அப்படியே படிந்து விடுமே நெஞ்சத்தில் அப்படிவுதானே எதிர்கால உலகை ஏற்றமுறச் செய்விக்கும்! “இன்று குழந்தைகள் நீங்கள்; நாளை இந்நாட்டின் தலைவர்” என்னும் பாவேந்தர் மொழி நடைமுறைப்படும் நிலை இது தானே! து

சிந்தித்தல்

"நீ மாணவன் போல் நடந்து கொள்ளவில்லை” என்று ஒரு மாணவரைக் கடிந்துரைத்தார் ஓர் ஆசிரியர். “நீங்கள் எப்பொழுது ஆசிரியராக நடந்து கொள்ளவில்லையோ, அப்பொழுது என்னை மாணவனாக நடக்க வேண்டுமென எதிர் பார்த்தல் கூடாது எனச் சட்ெ ன மொழிந்தான் அம்

மாணவன்.

"

-

நிலைமை என்ன? பிறர்க்கு அறிவுரைக்கும் - கண்டிக்கும் தண்டிக்கும் - ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவன் உள்ளுள் உள்ளம் கணக்குப் போடுகிறது! சொல் வீறுகிறது! சிந்திக்க வேண்டியது இளைஞர் உலகமா, முதியர் உலகமா? அறிவு பெற வந்த உலகமா? அறிவு தர வந்த உலகமா?

நூல் நயம்

உவப்பத் தலைக் கூடல் விளக்கம் போல்தானே.,

“நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு

என்றார் வள்ளுவர்.

(783)

'நவில் தொறும்' என்றால் படிக்கும் தோறும் என்னும் பொருளதா? இல்லை! எடுத்துச் சொல்லும் தோறும் என்பதே பொருள்! எடுத்துச் சொல்லும் போதுதான் சிக்கல் உண்டாகும்; மயக்கம் உண்டாகும்! அந்நிலை உண்டாகும் போதுதான் சிக்கல் அறுக்கும் சிந்தனையும், அச்சிந்தனையால் கலந்துரையாடலும் வழக்கொடு படுத்தலும் உண்டாகித் தெளிவு ஏற்படும்.