பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

இளங்குமரனார் தமிழ்வளம் 6

ன்றி

இச்சொல்வன்மைத் திறம் ஓதுதல், ஓதுவித்தல் ஆகிய தொழிலை மேற் கொண்ட பெருமக்களுக்கு மிகமிக யமையாதவை அல்லவோ!

குறிப்பறிதல்

ஒருவர் இரண்டு மணிநேரம் பேசினார்; அருமையாகத் தாம் பேசியதாக மகிழ்ந்தார்; அவையை நோக்கி “யான் பேசியவற்றுள் எவையேனும் ஐயம் உண்டாயின் கேட்கலாம்” என்றார் “ஐயம் கேட்பதற்கு எதுவுமே இல்லை” என்கிறார் அவையில் இருந்த ஒருவர். “அவ்வளவு தெளிவாகப் புரிந்ததா! மகிழ்ச்சி” என்றார் பொழிவாளர். "இல்லை! எதுவுமே புரிய வில்லை! புரிந்தால் தானே ஐயம் ஏற்படும்" என்றார் அவையில் இருந்தவர். அதனால் ‘அவையறிதல்' கூற வரும் வள்ளுவர் (72), அதற்கு முன்னர்க் ‘குறிப்பறிதல்' என்றோர் அதிகாரம் வைத் தார் (71) கற்பிக்கப் புகும் ஆசிரியர் மாணவர் குறிப்பறிந்து கற்பிக்க வேண்டும் அல்லவோ!

'முகத்தைப் பார்த்த அளவாலே அகத்தை அறிந்து விடலாமே' என்கிறார் (707). குறிப்பறிதல் என்பதைக் 'கூறாமை நோக்கிக் குறிப்பறிதல்' (701). 'ஐயப்படாது அகத்தது உணர்தல்' (702) ‘குறித்தது கூறாமைக் கொள்ளல்' (704) ‘அளக்குங்கோல் கண்ணல்லது இல்லை' (710) என்றெல்லாம் கூறுகிறார். 'குறிப் பிற் குறிப்பு உணர்வாரைத்’ தெய்வத்தோடு வைக்கிறார் (705;

702).

கற்றல், கற்பித்தல்

மாணவர் விருப்பத்தைத் தூண்டி, அவர் தம் வயப்படச் செய்து, கற்பிக்கும் பொருளில் அவர்களை முழுமையாக ஒன்றிவிடச் செய்வதே கற்பித்தலாகும்.

கற்பிப்பார் வேறு, கற்பிக்கும் கல்விவேறு; கற்கும் மாணவர் வேறு என்னும் தனித்தனி நிலையில் வகுப்பறை நிற்பின் கற்பித்தல் பயனற்றதாகி விடும்.

“நான் படிக்கும்போது என்னைநான் அறியேன்; நாஒன்றோ?

ஊன்படிக்கும்; உளம்படிக்கும்; உயிர்படிக்கும் உயிர்க்கு உயிரும் தான்படிக்கும்; அநுபவங்காண்'

99

என்று வள்ளலார் கூறியபடி கற்பிப்பாரும், கற்பாரும் கல்வியும் ஒரு பொருளாகி நிற்றல் வேண்டும். அத்தகு கல்வியே, மீளவும்