பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி 1

37

கேட்டறிய வேண்டும் என்பது இல்லாத ஒருமைக் கல்வி! ஓதாக்கல்வி!

செலச் சொல்லல்

'கேட்பார்க்குச் சொல்லுவார் எப்படிச் சொல்ல வேண்டும்' என்பதைச் ‘செலச் சொல்லல்' என்னும் தொடரால் கூறுவார் வள்ளுவர். அதனை ஏழுமுறை அவர் பயன்படுத்துகிறார் (424, 686, 719, 722, 724, 728, 730). அத்தகு அருமை உடையது அது!

பாடம் கற்பித்த ஆசிரியர், 'நுழைந்ததா?” என வினவ ‘வால் மட்டுமே பாக்கி' என்று மாணவன் கூறியதாகக் கூறும் செய்தி, வழிவழி வருவது. இச் 'செலச் சொல்லல்', செவியில் செலச் சொல்வது அன்று; மூளையில் முழுமையாகப் பதிந்து செலச் சொல்வது; ‘இன்ன அருமையான செய்தியை இவர் கூறினார்’ என இடங் கடந்து, காலங் கடந்து செல்லுமாறு பலப் பலரும் சொல்லி மகிழச் சொல்வது. அதுவே, செல்வாக்கு என்பதாம். ஆதலால் ஆசிரியர் ‘சொல்வாக்கு’, ‘செல்வாக்காக’ இருத்தல் வேண்டும் என்பதாம்.

வளர் பயிருக்கு வரு மழை

ஆர்வத்தோடு கற்க விரும்புவார்க்கு அறிவு புகட்டுதலை ஓர் அரிய உவமையால் காட்டினார் திருவள்ளுவர் அது,

'உணர்வது உடையார் முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று”

OTTLIÐI (718).

மழை கற்சரளையில் பொழிகின்றது; ஓடி வழியும் மேட்டு நிலத்துப் பொழிகின்றது; பாலையிலும் பொழிகின்றது; ஆனால் அம்மழை, வளமான பயன் தருவதற்காக வான் பார்த்து நிற்கும் வளர் பயிர் நிலத்தில் பெய்யுமானால், எத்தகு பயனுடையதாக இருக்கும்? ஒன்றுக்குப் பத்தாய் நூறாய் ஆயிரமாய்ப் பயன் தருமன்றோ அது. அவ்வாறே, உணர்ந்து பயன் பெற வேண்டும் என்னும் ஆர்வத் தளிர்ப்புடைய மாணவர்க்கு அவர் ஆர்வம் அறிந்து புகட்டுதல் பெருநலம் செய்யும் என்பதாம். ஆசிரியப்பேறு

எக்கேல் என்பார் தொல்லியல் ஆய்வுப் பேரறிஞர். அவர் இறக்கும் தறுவாயில் இருந்தார். அவர் முகத்தில் கவலைக்