38
இளங்குமரனார் தமிழ்வளம் 6
―
கோடுகள் காணப்பட்டன. அருகில் இருந்த மாணவர் 'ஐயா தங்கள் கவலையைக் கூறலாமா?' என வினாவினார். எக்கேல், 'என் மாணவர்களுள் எவரும் என்னை முழுமையாக அறிந்து கொள்ளவில்லை. மிசலே என்பான் மட்டும் அறிந்துள்ளான். ஆனால், அவனும் தவறாக அறிந்துள்ளான்' என்று தம் கவலையை உரைத்தார். மெய்யான ஓராசிரியர் நிலை இதுவே. ‘நன்மாணவப் பேறே, ஆசிரியப் பேறாம்' என்பது இது.
தன் மாணவன், தன் திறத்தை முற்றாக அறிந்து நன்கு வாங்கிக் கொண்டு, நாட்டுக்கும் நானிலத்திற்கும் பயன்படச் செய்யும் போது, அதற்கு மூலமாக இருக்கும் ஆசிரியன், “ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாயி”னும் மகிழ்கிறான்! தன் பிறவிப் பயன் தகுதி வாய்ந்த மாணவன் வழியாக நிறைவேறுகின்ற தன்றோ!
மாணவர்க்கு ஆசிரியரே அறிவுத் தந்தை ஆகலின், மாணவரைக் கல்வியில் உயர்த்துதலோடு, உயர்நிலை கண்டு உவகையடைபவராகவும் இருத்தல் இயல்பு. அதனால், தம்மினும் தம் மாணவர் அறிவுத் திறம் உலகுக்குப் பயனாம் என் பெறற்கரிய பெருமிதம் உண்டாதலும் இயல்பு.
னும்
என
“எம் ஆசிரியர் கொடையால் யாம் பெற்ற பேறு இது து” மேன் மாணவர் கூறும்போது, ஆசிரியர்க்கு உண்டாகும் இன்பத் தளிர்புக்குக் கோடியும் ஈடாவது இல்லை. அத்தகு மாணவர் வாய்ப்பது ஆசிரியர் பெற்ற பேறேயாம்.
புலமைப் பிறப்பு
மாணவர் அறிவு ஆற்றல் திறங்களால் தம்மினும் உயருங் கால் பொறாமை அடைவார் ஆசிரியர் ஆகார். மாணவர் தம் புகழ்ப் பேற்றைப் பொறாராய்த் தடைப் படுத்த நினைப்பினும் அவர் தம் ஆசிரியத் தகுதியை இழந்து விட்டவரே ஆகின்றார். சர். சி.வி. இராமனார் அன்ன புலமை மாணவர்க்கும், அப் புலமையை ஏற்றுப் போற்றா ஆசிரியர் ஒருவர் இருந்தனர் எனின் பிறர் பிறர்க்கும் அந்நிலை ஏற்படுதல் அரிதன்றே! புலமைக் காய்ச்சல் கொள்ளக் கூடாப் பிறப்பே, புலமைப் பிறப்பாம்!
இந்நாள் கல்விக் கூடங்களைக் காந்தியடிகள் அறிஞர் தாகூர் அனைய பெருமக்களும் வெறுத்தனர். வாழ்வொடு பொருந்தாக் கல்வி, உளத்தொடு பொருந்தாக் கற்பிப்பு என்பனவே. கல்விக் கூடங்களைச் சிறைக் கூடம் எனவும் தண்டனைக் களம் எனவும் கூறச் செய்தன. ஆனால் பள்ளிக் கூடம் என்பது