பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

தும்மல்

இளங்குமரனார் தமிழ்வளம் 6

பொய்ச் சினத்தைத் தணிப்பதற்குப் பொய்யாக ஒரு தும்மல் தும்முகிறான். தும்மல் வந்தவுடன் 'வாழ்க' என்று பக்கத்தில் இருப்பவர் வாழ்த்துவது வழக்கம் அல்லவா! அவ் வழக்கப்படி ஊடலை மறந்து 'வாழ்த்துவாள்' என்பதால் தும்முகிறான்! அவளும் உடனே வாழ்த்தவும் செய்தாள். ஆனால், அவனோடு ஒன்றி வாழ்ந்தவள் அவன் செயலை உணர மாட் ாளா? அதனால், கண்ணீரை வடித்துக் கொண்டு” நீர் யாரை நினைத்துக் கொண்டு தும்மினீர்" என்று சினந்தாள்!

இந்நிலையில் இயல்பாகவே தும்மல் வந்து விட்டது. 'தும்மினால் விடமாட்டாளே' என்று எண்ணிக், கையால் மூக்கைத் தேய்த்துக் கொண்டு முயன்று தும்மலை அடக்கினான். பொய்ச் சினம் பொங்கிய அவள், அவனுக்குத் தும்மல் வரு வதையும், அவன் அதை முயன்று அடக்குவதையும் ஓரக் கண் ணால் கண்டு விட்டாள். அதனால், மீண்டும் அழுதாள். “உமக்கு உறவானவர் உம்மை நினைப்பதையாம் அறியாதவாறு மறைக்கிறீரோ” என்றாள்'

தோல்வி

இனி எப்படித் தீர்ப்பது என்று எண்ணிக் கொண்டு அவளை ஏறெடுத்துப் பார்த்தான். அதற்கும் அவள் மசிய வில்லை. "எவர் அழகோடு என்னை ஒப்பிட்டுக் கொண்டு பார்க்கிறீர்” எனக் சினந்தாள். ஏன் அவன் சினங் கொள்ள வில்லை? ஏன் தன் ஆண்மைத் தனத்தைக் காட்டவில்லை! ‘வென்றேன்' என வீறாப்புக் காட்ட நினைக்கவில்லை! அவன் ஊடலுவகை அறிந்த கணவன்! அவன் சொல்கிறான்;

66

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலில் காணப் படும்’

(1327)

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்

(1333)

களப் போர்க்குச் சென்று பகை வென்று வெற்றி காணும் நிலைவேறு! அதுபோர் வீரன் நிலை! இது குடிநலம் காக்கும் கணவன் நிலை! குடும்பத்தில் நிகழும் ஊடற் போரில் தோற்றவரே வென்றவர்! அவ்வெற்றியை அவள் அடைய விரும்ப மாட்டாளா? அவனினும் அவள் விரும்புவாள் என்பது தெளிவே.