பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறக் கடன்

திருக்குறள் ஆராய்ச்சி 1

63

இனிக் கணவனுக்கு இல்லறக் கடமையென எவையும் இல்லையா? அக்கடமைக்காகத் தானே வாழ்வு! கடிய மருந்தைக் கட்டி பூசித் தந்து மருத்துவர் உண்ணச் செய்வது போல, இன்பத் தளிர்ப்புடன் இல்லறக் கடமைகள் இவை யெனக் காட்டி அவற்றைப் பேணச் செய்வது வள்ளுவ மாகும்.

நல்ல கணவன் என்பவன் தன் இயற்கைத் தொடர்பால் அமைந்த தந்தை, தாய் மனைவி ஆகிய மூவர்க்கும் நிலை பெற்ற துணையாக இருந்து காத்தல் வேண்டும். இதுவே அவன் தலையாய கடமை (41).

உலக நலங்கருதிய தொண்டுக்குத் தம்மை ஆளாக்கிக் கொண்ட துறவோர், உணவுக்கு வழியில்லா வறியர், காப்பற்ற ஏதிலியராய் வந்தவர் ஆகியோரைக் காப்பதும் அவன் கடனே!

(42).

நல்லறிஞர், வாழ்வில் வழிகாட்டும் பெரியவர், விருந்தினர், சுற்றத்தினர் என்பவருடன் தன்னையும் பேணிக் கொள்ளல் அவன் கடனே (43).

துறவோர் வறியர் முதலானவர்க் கெல்லாம் உதவுதல் இல்வாழ்வான் கடமையா? அவனால் முடியுமா? முடியுமா? என்று எண்ணத் தோன்றலாம்!

ம்

துறவோர் அறிஞர் விருந்தர் ஆகியோரைப் போற்றுதல் வகையால் அவர்கள் அடையும் நன்மையினும், பேணுபவன் குடியும் உலகுமே அடையும் நலம் பெரிதாம். 'பெரியாரைத் துணைக்கோடல்' என்னும் பேறு வாய்க்கும் வாயில் இது தானே! நற்பெருமக்கள் நாடிவரும் இல்லம் பற்பல நலங்களைத் தானே பெறுதல் கண்கூடு. அவர்கள் கொண்டுள்ள நிறை நலங்களை அறிந்து பயன்படவும், தாம் அறியாதே கொண் டுள்ள குறைகள் தாமே அகன்று ஒழியவும் இந்நன் மக்கள் தொடர்பு போலும் ஒன்று இல்லையாம். இனி, அவர்கள் என்ன சுவை' விரும்பி வருவார் அல்லரே! சோற்று வாழ்வே வாழ் வெனக் கொண்டார் அல்லரே! குடும்ப நிலை அறியாத நீர்மையர் அல்லரே! இன்னும் ஒருவழியும் இல்வாழ்வானுக்குக் காட்டினாரே வள்ளுவர்!