பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

இளங்குமரனார் தமிழ்வளம் 6

அளவறிந்து வாழ்க; இல்லையானால் பொருள் இருப்பது போல் இருந்து போய்விடும்' என்றும் (479),

'தம்மிடத்துள்ள பொருளின் அளவை அறிந்து பாராமல் ஒருவர் செய்யும் உதவியால், அவர்தம் பொருளின் அளவு மிக விரைவிலேயே அழிந்து போகும்' என்றும் (489) எச்சரிக்கிறாரே! அதனால், கொடுத்துக் கெடவேண்டும் என்பது வள்ளுவமன்று; கொடுத்துச் சிறக்க வேண்டும் என்பதே வள்ளுவமாகும்.

ஒருவன் இல்வாழ்க்கை அன்புத் தன்மையையும், அறச் செய்கையையும் கொண்டிருப்பதே அவ்வாழ்வின் பண்பாகவும் பயனாகவும் விளங்கும் என்னும் வள்ளுவர் (45), அவ்வில் வாழ்க்கையால், அவ்வாழ்வுடையான் தெய்வமாக உலகோரால் மதிக்கப்படுவான் என்று இல்வாழ்வின் நிறைவை நிலை நாட்டுகிறார்.

66

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்

என்பது அது .

தாய் நிலைக் கணவன்

“உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்

(50)

என்பதற்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்தவர் காந்தியடிகள். அவர் இயல்பான ஆன்மாவாகவே பிறந்தார்; வளர்ந்தார், வாய்மை வாழ்வால் பேரான்மா (மகாத்மா) என்று உலகம் போற்றும் பெருநிலை பெற்றார்.

காந்தியடிகள் நாட்டுக்கும் நானிலத்திற்கும் ஆற்றிய தொண்டை உலகம் நன்கு அறியும். அவர் கணவன் என்னும் நிலையில் ஆற்றிய வீட்டுத் தொண்டை, அவர் வரலாற்றைக் கற்றாரே அறிவர்.

ஒப்பற்ற துணையாகப் பின்னே வளர்ந்த அன்னை கத்தூரிபா-காந்தியடிகளார் துணைவியார்-நடுக்காலத்தே, அரத்த (இரத்த)க் கொதிப்பு நோய்க்கு ஆட்பட்டார். மருத்துவர் ‘உப்பு ஆகாது; பருப்பு ஆகாது; எண்ணெய் ஆகாது' என்றனர். அடிகளார், 'மருத்துவர் குறிப்பைப் பின்பற்ற வேண்டும்' என்றார். மறுத்தார் அம்மையார். வலியுறுத்தினார் அடிகளார். “முடியவே முடியாது; அவ்வாறு சுவையற்ற வகையில் உட் கொள்ள

66