பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

“நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன்”

என்கிறாள். (1181)

1

73

கொடுத்தது கொடுத்தாயிற்று; பொறுத்துக் கொள்ளலாம்

என்றால் பெரும்பாடாக உள்ளது. ஆற்றிலே ஊற்றுத் தோண்டி

நீரை அள்ளினால், அள்ள அள்ள ஊறுவது போல, உள்ளிருந்து கவலை ஊற்றெடுக்கிறது. அக்கவலையை மறைக்கத் துணிந்தாலும் முடிவதில்லை. அயலாரும் அதை எப்படித்தான் கண்டு கொள் வார்களோ? 'என்ன? என்ன? என்பார்க்கு என்ன சொல்வேன்? “மறைப்பேன்மன் யானிஃதோ நோயை; இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும்"

நினைதலும் கூறலும்

(1161)

கணவன் பிரிவை ஆற்றுவதற்கு என்ன செய்கிறாள்? அவன் உடன் இருந்தபோது எப்படியெல்லாம் பேசினான், எவ் வெவ்வாறெல்லாம் மகிழ்ந்தான், எங்கெங்கெல்லாம் அழைத்துச் சன்றான், தான் ஒன்றுற்ற போதெல்லாம் எப்படி, எப்படி உருகினான்; உதவினான்-இவற்றையெல்லாம் எண்ணுகிறாள்.

னனில், எண்ணாமல் தனியே இருந்தால் நெஞ்சமே தின் கிறதாம்! ஆதலால், எண்ணுகிறாள்; தோழியிடத்தும் உரிமை யாளரிடத்தும் அவர்தம் அருமைக் குணங்களைப் பற்றியே பேசுகின்றாள்.

“உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்’

(1184)

அவரைப் பற்றி-அவர் குணங்களைப் பற்றி-அவர் செயல் திறனைப் பற்றி-எவராவது பேசுகிறாரா? தன் செவி குளிரக் கேட்டுக் கொள்கிறாள்.

66

L

'அவர்மாட் டிசையும் இனிய செவிக்கு

குறை கூறுவார்

(1198)

ஊரவர் அனைவரும் குறை இல்லாதவரா? பிறரைக் குறை கூறுவதே பிறவிக்கடன் என்று கொண்டாரும் இலரா? “நம் பாட்டை நாம் பார்க்கலாம்; அவர்கள் பாடு அவர்களோடு என்று இருப்பார் எத்தனை பேர்? ஒருவர் துன்பப்படும் நிலையில் அத்துன்பத்திற்கு ஆறுதல் தருவதற்கு மாறாகக் கிண்டிக் கிளறிப் பேசுவாரும் இட்டுக்கட்டி மொழி வாரும் அதனையும் இனியவர் போல் வந்து என் காதில் விழுந்தது அதனால்