பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி 1

77

“காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்

காணேன் தவறல் லவை

எது இனிது?

99

(1286)

உண்பது இனிதா? உண்டது செரிப்பது இனிதா? இல் வினாக்களை எழுப்பினால் ஆராயாமையாலும் சுவை ஆர்வத் தாலும் 'உண்பதே இனிது' என்பர். ஆனால், ஆய்வோர்க்கு என்பர்.ஆனால்,ஆய்வோர்க்கு உணவு செரிப்பதே இன்பம்' என்பது இனிது விளங்கும். அதிலும் முதியர்க்கு மிக நன்றாக விளங்கும்.

வள்ளுவ மனைவி, உண்ணும் இன்பத்தினும், உண்டது செரிக்கும் இன்பமே நல்லின்பம் எனக் கண்டவள். அதுபோல் அன்பு தவழத் தவழக் கூடுவதிலும் கூட, 'ஊடுவதே மிகுந்த ன் பமாவது' எனக் கண்ட வள். ஆதலால், கணவனுடன் ஊடலின்பம் கொள்கிறாள்.

"உணலினும் உண்டது அறல் இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது”

உப்பும் ஊடலும்

(1336)

அட்டிற் கலை (சமையற் கலை)யில் தேர்ந்தவளாகிய அவளுக்கு உப்பைப் பற்றி தெரியாதா? 'உப்பே' இல்லை என்றால் ‘சப்பு'! ஆனால், கொஞ்சம் உப்புக் கூடிவிட்டால்? உப் பில்லாமல் கூடச் சாப்பிடலாம்! உப்பில்லா நோன்பு மருத்துவக் கட்டளை. ஆனால், உப்புக் கூடிவிட்டால், 'துப்பு' என்ற நிலை ஆகிவிடும். 'துய்ப்பு’ எல்லாம் ‘துப்பு’ தலானால் என்ன ஆவது?

உப்பு இல்லாமலும் சுவையில்லை; சிறிதே கூடிவிட்டாலும் சுவையில்லை. ஓரளவே உப்பு இருத்தல் வேண்டும்! அப்படியே, ஊடல் இல்லாமலும் இன்பச் சுவை இல்லை அவ்வூடல், அளவில் மிகுந்து விட்டாலும் இன்பச் சுவையாகாது!

இத்தெளிவுடைய வள்ளுவத் தலைவி, வள்ளுவத் தலைவி, உடல் நிலை உணர்வு நிலை உயிர்நிலை உவகை நிலை ஆகிய எல்லாமும் சிறக்க, ‘உப்பியல்' முறையால் ‘ஒப்பியல்' கண்டு வாழ்வைக் களிப் பாக்குகிறாள்.

“உப்பமைந் தற்றால் புலவி; அதுசிறிது மிக்கற்றால் நீள விடல்”

(1302)