பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

திருக்குறள் ஆராய்ச்சி 1

81

உடைச் செம்மை, ஒப்பனைச் சால்பு, காலம் போற்றல், கருத்தில் ஒருமை என்பனவெல்லாம் மனை மாட்சிகளேயாம். இதன் விரிவைக் காண விரும்புவார் பாவேந்தர் படைத்த 'குடும்ப விளக்கு’ முதற்பகுதியைக் கற்பாராக! அதற்கு எதிராய் குடும்பத்தைக் காண விரும்புவார் 'இருண்ட வீடு' என்னும் அவர் தம் மற்றொரு படைப்பைப் பயில்வாரக! கற்ற குடும்பச் சீர்மைக்கு முன்னதும், கல்லாக் குடும்பம் கொடுமைக்குப் பின்னதும் அவரால் எடுத்துக் காட்டாகத் தரப்பட்டவை. அவை பெரு வழக்கு மனைமாட்சியமைந்த கல்லா மனைவியும் அரிதின் உண்டு. இவை விதிவிலக்குகளே அல்லாமல் விதிகள் அல்லவாம்.

குடும்பத்திற்கு எத்தனையோ வாய்ப்புகளும் பெருமைகளும் இருக்கலாம். ஆனால், மனைமாட்சி மனைவியிடத்து அமைய வில்லை எனின், மற்று அமைந்தவை எல்லாம், அமையாதவையே! அதனால்தான்.

66

'மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல்”

என்றார் வள்ளுவர்.

(52)

பத்துவகைக் காய்கறிகள் இருந்தும், ஆக்கும் பக்குவம் அமையாமையால் ஒதுக்கி எறிபவை இல்லையா? கொல்லைப் புறத்துக் கீரையைப் பறித்துக் குழம்பாய், கொத்தாய், பொறியலாய் மூவுருப்பெற்று முழுதின்பச் சுவை நலமாய் அமைந்து விடுவது இல்லையா? இதுவும், மனைமாட்சியா? ஆம், தலையாய மனை மாட்சி! பொருளியல், உடலியல், மருந்தியல், மனஇயல் எல்லாம் கூடிய ‘மனை இயல்' மாட்சி இது!

கற்பென்னும் திண்மை

'பெண்ணினும் பெருமை மிக்கவை எவையும் இல்லை' என்று, வள்ளுவரை ஓங்கிய குரலெழுப்பி உரைக்க வைக்கும் நற்பண்பு, இக் கற்புடைமையாகும்.

66

‘கற்பு' ‘கற்பு' என்று பலராலும், பலகாலும், உரைக்கப் படுகிறதே, அதுதான் என்ன? இவ்வினாவை எழுப்பாதீர்; யானே விடையும் கூறிய பின்னரும் அதன்மேல் வினாவுதல் வெற்றுவினாவா? வெட்டி வினாவா?” என வள்ளுவம் புன் முறுவல் பூக்கிறது! ‘திண்மை' என்று சொல்லி விட்டேனே பின்னும் என்ன தெளிவு வேண்டும்? என்கிறது அது.