பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

85

அவர் பிறந்தது போலவும் அவர் நினைத்துக் கொண்டிருப்பது வெளிப்படாமல் போகாது.

பாகவதருக்கு முப்பதாவது வயதும் வந்துவிட்டது. அது வரை அவருக்குத் திருமணம் முடியவில்லை. இசைப் பயிற்சியும், மேடைக் கச்சேரியுமாக இரவு பகல் ஒழியாது இருந்த அவருக்குத் திருமணத்தைப் பற்றி நினைக்கக்கூட நேரமில்லாது போயிற்று. ஆனாலும் பெற்றவர்கள் பெரியவர்கள் இப்படியே இருக்க விடுவார்களா?

புதுமங்கலம் புலிக்குட்டிப் பாகவதருக்கு ஒரே மகளாகப் பிறந்தாள் வள்ளியம்மை. அவளுக்கு முன்னும் பின்னும் ஆணோ பெண்ணோ எதுவும் கிடையாது. பாகவதரும் நன்றாகக் கஞ்சம் பிடித்துச் சொத்து நிறையச் சேர்த்து வைத்திருந்தார். மகளுக்கு இசைப் பயிற்சி உண்டாக்கியதுடன், நாரையூர் நட்டுவனான

காண்டு நடனமும் கற்றுக் கொடுத்திருந்தார். "வள்ளி யம்மையின் 'லாகவ'த்திற்கும் செல்வச் சிறப்பிற்கும் எவன் தான் கிடைக்கப் போகிறானோ! அவன் நல்ல பேறுதான் செய்திருக்கவேண்டும் என்று தமக்குள்ளே நினைந்து பெருமைப்பட்டுக்கொள்வார். அவருக்கு, கோவிந்த பாகவதருக் காகப் பெண் பார்ப்பதற்கு வந்த ஒன்றே ‘சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி' பொழிந்த இன்பமாயிற்று. திருமணத்திற்குக் குறைவு ஏதாவது உண்டா? ஒரே தடபுடலாகத் திருமணம் நடந்தேறியது. மகள் திருமணத்திற்குப்பின் ஒரேயடியாக ஊதிப் ஊதிப் போய் விட்டார் புலிக்குட்டிப் பாகவதர். என்ன இருந்தாலும் இசை வேந்தர் கோவிந்த பாகவதர் மாமனார் இல்லையா அவர்? சாதாரணப் பெருமையா?

திருமணத்திற்கு முன்பு, ‘மனைவி வந்துவிட்டால் இசை என்னாகுமோ?' என்னும் எண்ணமும் கலக்கமும் கூட கோவிந்த பாகவதருக்கு இருந்ததுண்டு. ஆனால் வள்ளியம்மை - பாகவதர் மகள் - மனைவியாக வாய்த்த பின்பு இரட்டிப்பு இன்பமாக வளர்ந்தது. முப்பது வயதுக்கு மேல் நடனம் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். நடன ஆசிரியர் வள்ளியம்மைதான்! வீட்டில் ஆடல் பாடல் முழக்கங்களுக்குக் குறைவு இல்லை. உள்ளூரில் இருந்தாலும் இசை; வெளியூரில் இருந்தாலும் இசை. சை. போன போன இடங்களிலெல்லாம் புகழ்மாலை; பணமுடிப்பு;கொள்ளை மகிழ்ச்சியாக இருந்தது பாகவதருக்கு.

L பாகவதர் தேடிய பணத்தை யெல்லாம் பத்திரமாக வைத்திருந்தார். இன்னும் பணமாக வைத்துக் கொண்டிருக்க