பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

இளங்குமரனார் தமிழ்வளம் - 8

“அவசியம் நீங்கள் மலேயாவுக்கு வரவேண்டும். உங்கள் இசையைக் கேட்க ஏங்கிக் கிடக்கின்றது மலேயா நாடு; இதற்கு முன் மூன்று நான்கு தடவைகள் முயன்றும் நீங்கள் தட்டிக் கழித்து விட்டீர்கள். எப்படியும் இம்முறை வந்தே தீரவேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டனர். மலேயாவிலிருந்து தமிழ் நாட்டைச் சுற்றிக் காண வந்திருந்த ஒரு கூட்டத்தினர்.

அன்பர்கள் வேண்டுகோளை எத்தனை முறைகள்தான் மறுக்க முடியும்? “சரி! ஒருமுறை வருகின்றேன்” என்று ஏற்றுக் கொண்டார் பாகவதர். மாதங்கள் சில சென்றன. பாகவதரும் அவர் குழுவினரும் மலேயா வருவதற்குச் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் அனைத்தும் செய்து கொண்டு, நேரடியாகவே அழைத்துப் போவதற்கு ஒருவர் வந்து விட்டார். பாகவதர்க்குப் பெருஞ் சங்கடமாக இருந்தது. வற்புறுத்தலுக்காக ஒப்புக் கொண்டிருந்தவர் அவர், இவ்வளவு விரைவில் போக வேண்டியது வரும் என்றோ அதுவும் தற்பொழுது போக வேண்டியது வரும் என்றோ அவர் நினைக்கவில்லை. பிள்ளை யில்லை என்னும் பெருந்துன்பத்திலே இருந்த பாகவதருக்கு வயிற்றிலே பால் வார்த்தது போல அவர் மனைவி வள்ளியம்மை கருக்கொண்டு ஐந்தாறு மாதங்கள் ஆகியிருந்தன. இந்நிலைமை யில் மலேயா போக மனம் வருமா பாகவதருக்கு?

மனிதன் சொல்லைக் காப்பாற்ற வேண்டும்! பாகவதர் விமானத்தில் பறந்தார். மலேயா நாட்டில் இசை மழை பொழிந்தார். அந்த இன்பத்திலே நாடெல்லாம் மூழ்கித் திளைத்தது. "இங்கு வரவேண்டும். இங்கு வரவேண்டும்” என்று முன்பு திட்டமிடப் படாத புதுப்புது இடங்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. த பாராட்டு விழாக்களுக்கும் விருந்துகளுக்கும் குறைவில்லை. என்ன இருந்தால்தான் என்ன? மற்றவர்களை யெல்லாம் கொண்டாட்டத்தில் ஆழ்த்திய பாகவதர் மட்டும் திண்டாட் டத்தில் தத்தளித்தார். வாரம் தவறாமல் வள்ளியம்மைக்கும், பிள்ளை பிறந்து விட்டதா? சுகமாக இருக்கிறதா?" என்று கேள்விமேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். “ஆண் குழந்தை பிறந்துள்ளது” என்று கடிதம் வந்த அன்று அவர் இசை மேடையே ‘தனி முழக்கம்’ தான்! அன்று ஏற்பட்ட மகிழ்ச்சிப் பெருக்கிலே இசைவிருந்துடன், சுவை விருந்தும் பாகவதர் தம் செலவிலே வந்தவர்களுக்கெல்லாம் செய்தார் என்றால் அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிப் பெருக்கு ஒன்று தானே காரணம்?

66