பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.

-

திருக்குறள் கதைகள்

95

விட்டார். “இல்லை” என்றால், “ஏன்யா, நீ ஒரு மனிதன் தானா? இந்த ஊரில் எவனாவது மனிதன் இருக்கிறான் என்றாவது நினைத்தாயா ஐயா? ஏய்யா, பட்டினி பசியாகவா படுப்பார்கள்; வாய்யா எழுந்து” என்று கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே வீட்டிற்கு வந்துவிடுவார். இந்த இருபதாம் நூற்றாண்டிலே காசு வாங்கிக் கொண்டு சோறு போடு வதிலேகூடப் பாதிக் கல்லையும் மண்ணையும் கலந்து போடும் சாப்பாட்டுக் கடைகள் இருக்கும் காலத்திலே குழந்தைகளுக்கு உதவியாக இருக்கட்டும். பசித் துயர் போகட்டும் என்று இனாமாக அரசாங்கமும் அயல்நாடுகளும் வழங்கும் உணவையும் பால் பொடியையும் - பண்டங்களையும் ஒழுங்காகக் கொடுக்காமல் வயிற்றில் அடித்துச் சுரண்டித் தின்னும் கயவர்கள் மலிந்துள்ள காலத்திலே - முத்தப்பர் செயல் ஆ! தெய்வச் செயல் என்று வாழ்த்துவதற்கு என்ன ஐயம்!

-

-

ஏழைக்

வள்ளலாம் முத்தப்பரைத் தேடி வந்தவர்கள் பத்து வகைக் கறியும் பாங்காய்ச் சமைத்துத் - தாழிட்டு இறக்கிப் பாயச் பண்டங்களுடன் சாப்பிடுவார்கள். உடனிருந்து ஒருநாளும் உண்டறியார் முத்தப்பர். இந்த விருந்துப் பண்டங்கள் - வீட்டுப் பண்டங்கள் ங்கள் எதனையும் கை தொட்டு அறியார். ஐம்பது நூறுபேர்கள் இருந்து இனிப்பு, காரம், காபி சாப்பிடுவார்கள் - முத்தப்பர் செலவிலே! ஆனாலும் ஒரு சிறு பங்கும் அதில் அவர் எடுத்துக்கொள்வது இல்லை. பக்கத்திலிருந்து பரிமாறியதுடன்

சரி.

என்று

முத்தப்பர் செயல் விருந்தாளிகளுக் கெல்லாம் வேடிக்கையாக இருக்கும். ஏன்? வேதனையாகக் கூட இருக்கும். முத்தப்பருக்கு மட்டும் மகிழ்ச்சியாகவே இருந்தது. அவரும் வேதனைப்பட்ட காலம் உண்டு. “மற்றவர்களெல்லாம் அறுசுவையுணவும் பெரு விருப்புடன் அருந்த, நமக்கு மட்டும் எல்லா வாய்ப்புக்களும் ருந்தும் உடனிருந்து உடனிருந்து உண்ணமுடியவில்லையே" ஆனால் வேதனைப் பட்டுப்பட்டு உள்ளம் மரத்துப் போய் விட்டது. அதன் பயன் உவகையாக மாறியது. அடுத்தவர்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லச் சொல்லச் சாப்பாட்டைச் சரித்துக்கொண்டு இன்பமுறும் அவரை நினைத்துத்தான் திருவள்ளுவர் பிறருக்கு ஈவதை “ஈத்துவக்கும் ன்பம்” என்று கூறினாரோ என்று குறள் கற்றவர்கள் எண்ணிக் கொள்வது உண்டு. ஆனால் முத்தப்பர் எண்ணுவதோ அதனை அன்று. "வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி, தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது." என்பதையே எண்ணிக்