பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

66

இளங்குமரனார் தமிழ்வளம் – 8 $

‘நதிக்குடி நாராயணன் மகளை உனக்குப் பார்த்திருக்கிறேன். ஒரே பெண்-நிலபுலம், பொன் பொருள், பட்டப் படிப்பு ஆகியவை எதற்கும் குறைவு இல்லை” என்றேன். “போங்கப்பா போங்கள்; இவற்றையெல்லாம் என்னிடம் ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். இவள் தான் பெண்; கட்டு தாலியை என்றால் மாட்டேன் என்று மறுத்து விடுவேனா? நீங்கள் என்ன உங்கள் மகனுக்குக் கேடா செய்துவிடுவீர்கள்?" என்று சொல்லி, மங்கலமாக மணமுடித்துக் கொண்டான். அவனுக்கு என்ன அரசபோகம்தான். என்ன குறை? தகப்பன் வீட்டி லே சில நாள்; மாமன் வீட்டிலே சிலநாள்; எங்கும் விருந்து, கொண்டாட்டம்.

"பெண்ணாக வாய்த்தாளே நாகம்மாள் அவள் கையிலே கரிப்பட்டிருக்குமா? காபியாவது போடத் தெரியுமா? செல்வத்திலே வளர்ந்தபிள்ளை. பாலிலே பல் தேய்த்து பன்னீரிலே குளிப்பார்கள் என்று பேச்சுக்குத்தான் சொல்லிக் கொள்வார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் உண்மையாக இருந்தாலும் வியப்படைய ஒன்றுமில்லை என்பதை இவள் வந்த பின்புதான் தெரிந்து கொண்டேன். இவள் படிப்பிற்கும் பணத்திற்கும் வேலையுமா பார்க்க வேண்டும்? வீட்டிலே இருந்தால் போதாதா? அவளை மருமகளாகப் பெற நான் உண்மையாகவே புண்ணியம் தான் செய்திருக்க வேண்டும்” என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவர் பேச்சு அவருக்கு இருந்த மகிழ்ச்சியைக் காட்டத் தவறவில்லை.

பேச்சின் இடையே ‘தம்பித் துரைக்கு ஏதாவது ஏற்பாடு- என்று கேட்டு வைத்தார் அம்பலவாணர்.

66

அந்தக் கழுதை பேச்சு வேண்டாம்; தகப்பன் சொல் கேளாத தடிக் கழுதை; நான் எழுபது ரூபா (எழுபதாயிரம்) வரக்கூடிய ஒருத்தியை அவனுக்குப் பார்த்திருந்தேன். பணம், படிப்பு, பதவி, பகட்டு இவையெல்லாம் பண்புக்குப் பின்பு தானாம். “பண்பு இல்லாத ஒருத்தி கோடி கோடியாகக் கொண்டு வந்தாலும் எனக்கு வேண்டாம்; பணத்திற்காக அவளைக் கட்டிக் கொண்டு மாரடிக்க முடியாது. படிப்புக்காகக் கட்டிக் கொண்டு ஒப்பாரிவைக்க முடியாது. இப்படிக் காழுத்துப் போய்ப் பேசினான்:- என்னிடமே பேசினான்.

“அறிவு கெட்ட நாயே, மானம் கொஞ்சமாவது இருந்தால் என் முகத்தில் விழிக்காதே. எந்த நாயையும் கட்டிக்கொண்டு நாசமாகப் போ." என்று அனுப்பி விட்டேன். அன்று அவன்