பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

16. கப்பலோட்டிய தமிழன்

‘ஐயா, இங்கே வாருங்கள்” என்று ஒளி படைத்த கண்ணும் உறுதிகொண்ட நெஞ்சும் உடைய தமிழ்ப் பெருமகன் ஒருவரை, ஒருவர் அழைத்துச் சென்றார். தன்னந் தனியான ஓரிடத்தை அடைந்து சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுப் பேசினார் அழைத்துச் சென்றவர்: “ஐயா இந்த இலச்சம் ரூபாக்களையும் அன்பளிப்பாகத் தருகின்றோம்; நீங்கள் வேறொன்றும் நினைக்க வேண்டாம்; இதை வாங்கிக்கொண்டு, நீங்கள் புதிதாகத் தொடங்கியிருக்கும் இயக்கத்தை மட்டும் விட்டுவிட்டால் போதும், மேலும்மேலும் உங்களுக்கு எவ்வளவு உதவி வேண்டுமானாலும் செய்யக் காத்திருக்கின்றோம்.”

“பணத்தைக் கண்டால் பிணமும் வாய்திறக்கும்” “ஈட்டி எட்டு மட்டும், பணம் பாதாள மட்டும்” “பணம் பத்தும் செய்யும்" என்பனவெல்லாம் வழக்கிடைக்காணும் பழமொழிகள்! ஆனால் ‘பணம் என்றவுடனே ‘தலையசைத்து விட்டாரா?

ர்

தமிழ்ப் பெருமகன் கூறினார்: "இந்த ஓர் இலட்சம் ரூபாக்களும் எனக்குக் கைக்கூலியா? (இலஞ்சமா?) உயிரோடு உயிராக ஒன்றிவிட்ட உணர்ச்சியால் தொடங்கிய இயக்கத்தை உன் பிச்சைக் காசு கருதி விட்டுவிட வேண்டுமா? பணத்திற்காக வாயைத் திறக்கும் பண்பில்லாதவன் எவனாவது இருந்தால் அவனிடம் போய்ச் சொல் உன் காரியத்தை; சேசே! மானமற்ற பிழைப்பும் ஒரு பிழைப்பா?”

கண்களில் கனற்பொறி பறக்கக் கூறிவிட்டு கடுகடுத்த நடையிலே புறப்பட்டார் திருக்கு மீசைக்காரத் தீந்தமிழர்

என்ன இது? இப்படியும் உண்டா? ஓர் இலட்சம் ரூபா வலிய வந்தும், போ -பழிவழிப் பணமே போ பழிவழிப் பணமே போ - என்று எற்றித் தள்ளிவிட்டு ஏறு நடையிட்ட அந்த ஏந்தல் யாவர்? அவரே வ.உ. சிதம்பரனார்.

"சொந்த நாட்டினை வந்த நாட்டினர் ஆளவோ? நாம் ஆண் பிள்ளைகள் அல்லமோ? உயிர் வெல்லமோ?" என்று