பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. அருளாளன் ஆபிரகாம்

ஒரு சாலை வழியே இரண்டு குதிரைகள் ஓடிக் கொண்டிருந்தன. அக் குதிரைகளின் மீது இரண்டு பேர்கள் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் சென்று கொண்டிருந்த திசைக்கு எதிரேயிருந்து ஒருவன் நடந்து வந்தான். அவன் குதிரையில் வந்தவர்களுள் ஒருவரை இன்னார் என்று தெரிந்து கொண்ட படியால் சட்டென்று ஒரு பக்கமாய் ஒதுங்கி நின்று தன் தொப்பியை எடுத்துக் கையிலே வைத்துக்கொண்டு தலை தாழ்ந்து பணிவோடு வணக்கம் செய்தான். குதிரையில் இருந்த அவர் உடனே பதில் வணக்கம் செலுத்தி விடாது கீழே இறங்கி வந்து, வழிப்போக்கனைப் போலவே பணிவோடு நின்று தொப்பியைக் கையிலே எடுத்து வைத்துக் கொண்டு வணங்கினார். இவ்வாறு நடக்கும் என்பதைக் குதிரையில் உடன் வந்தவனும் நினைக்கவில்லை; வழிப்போக்கனும் நினைக்க வில்லை. வியப்படைந்தனர்.

66

குதிரையில் வந்த இருவரும் மீண்டும் தம் பயணத்தைத் தொடங்கினர். உடன் வந்தவன் போகும் பொழுதே கேட்டான்: அந்த ஏழையை நீங்கள் இவ்வளவு பணிவுடன் வணங்க வேண்டுமா? குதிரையில் இருந்து கொண்டே வணங்கியிருக்கக் கூடாதா?"

"ஏழை, செல்வன் என்ற வேற்றுமை பணிவுக்கு இல்லை; இருக்கவும் கூடாது. ஒரு நாட்டின் தலைவன் பணிவுடைமையிலும் தலைவனாக இருக்க வேண்டுமே அன்றித் தாழ்ந்து விடக் கூடாது. எந்தக் காரணம் கொண்டும் எந்த ஓர் ஏழையும் பணிவில் என்னை வெற்றி கொண்டுவிடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது என் கடமை. என்றார் தாழ்ந்து வணங்கிய பெரியவர். வாயடைத்துப் போனான் உடன் வந்தவன்.

6

-

குதிரையிலிருந்து கீழே இறங்கி வணக்கம் செலுத்தியவர் எளிய பதவியில் இருந்தவரா? அரிதினும் அரிய பதவி அமெரிக்க நாட்டின் தலைவர் பதவி! அவர் பெயர், ஆபிரகாம் லிங்கன்.