பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. கடல் தரா முத்துக்கள்

பன்னிரண்டு வயது கூட ஆகாத ஓர் இளைஞர் இருந்தார். அவர் ஒரு கணக்கரிடம் எழுத்து வேலை பார்த்து வந்தார். அவருக்கு மாதச் சம்பளம் - முப்பது நாட்களும் முயன்று எழுதினால் சம்பளம் - ரூபாய் ஒன்று!

சம்பளம் குறைவு என்றாலும் இளைஞர் தம் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தார். எதனையும் ஆழ்ந்து கவனித்துச் செய்யும் இளைஞரது வேலைத் திறம் கணக்கரைக் கவர்ந்தது. இளைஞர்மேல் அன்பு கொள்ளுமாறும் செய்தது. அனால் வேலைத் திறமோ அன்போ சம்பளத்தை ஒன்றும் கூட்டி விடவில்லை!

இளைஞர் கணக்கரிடம் வேலைபார்த்து வரும்போது, ரு தாசில்தாருடைய உறவு ஏற்பட்டது. அவர் திருவாரூரில் இருந்தார். அவரை நம் இளைஞர் அடிக்கடி சென்று கண்டு பேசியும், அவர் மகிழுமாறு பணிகள் செய்தும் வந்தார். அதனால் இளைஞர் தாசில்தாரது அன்பரானார்.

ஒருநாள் தாசில்தாரைப் பார்ப்பதற்காகச் செல்வர் ஒருவர் வந்தார். "ஐயா, யான் வெளியூருக்குச் சென்று வரவேண்டிய அவசியம் உள்ளது. வரவும் நாட்கள் பிடிக்கும், நிலத் தீர்வைப் பணம் கட்ட வேண்டியதுள்ளது. கணக்கர் ஊரில் இல்லை. தாங்கள் பணத்தை வாங்கிக் கொண்டால் உதவியாக இருக்கும்” என்றார்.

தாசில்தார் அவர் தரும் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்! எவ்வளவு பெற்றுக் கொள்வது? தாசில்தாருக்கு இவ்வளவு ரூபா என்று தெரியாது; செல்வருக்கும் தெரியாது. கணக்கர் ஊரில் இல்லை. ஆனால், அக்கணக்கரிடம் வேலை பார்க்கும் இளைஞர் - நம் இளைஞர் - தாசில்தாரின் அருகில் இருந்தார். "எவ்வளவு தொகை என்று உனக்குத் தெரியுமா?" என்னும் | உ குறிப்புடன் இளைஞரைப் பார்த்தார் தாசில்தார்.

66

ஐம்பது அறுபது இடங்களில் நிலம் வைத்திருந்த அச் செல்வரது கணக்கை இளைஞர் எப்படி மனத்தில் வைத்திருக்க முடியும்?" என்ற திகைப்பும் தாசில்தாருக்கு இல்லாமல் இல்லை. ஆனால் இளைஞர் முகமோ ‘அதனைக் கூற முடியும்’