பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

வி

125

பெண் தன் தாய் வீட்டை விட்டுக் கணவன் வீட்டுக்குக் கிளம்ப நேரும்போது அவளை அறியாமலே கண்ணீர் விட்டுவிடுவாள். அது தாய் வீட்டுப் பற்றாலும், வளர்த்துவிட்ட வாஞ்சையாலும் ஏற்படுவது. நிறைமதி மட்டும் இதற்கு விலக்காகிவிட முடியுமா? என்று எண்ணினேன். பெற்றோர்களிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட வேண்டிய பொழுதும் வந்துவிட்டது. முறைப்படி நானும் நிறைமதியும் சென்றோம். என் நினை வல்லாம் நிறைமதியின் முகத்தைப் பார்ப்பதிலே தான் இருந்தது. நான் நினைத்தது போல் எதுவும் நடந்துவிடவில்லை. நிறைமதியின் தந்தையார் கந்தப்பர்தான் 'ஓ'வென்று அலறி விட்டார். “இப்படித்தானா? பச்சைப் பிள்ளைபோல் அழுவது? இன்றைக்குப் போனால் நாளைக்கு வேண்டுமானாலும் இங்கே திரும்பலாமே. வேலம்பட்டி என்ன வீராணத்திற்குத் தொலை யூரா?” என்று அங்கிருந்த பலர் தேற்றிக் கூறினர். என்ன சொல்லியும் அவர் சஞ்சலம் மாறவில்லை.

எங்களுடன் வேலம்பட்டிக்கு மாமாவும் வந்தார். என்னைத் தனியாக அழைத்து, அறியாப் பிள்ளைபோல் நைந்து நைந்து கூறினார்: “என் மகள் கண் கலங்க நான் பார்த்தது இல்லை. பார்த்துக் கொண்டிருக்கவும் என்னால் இயலாது. அவளுக்குக் கண்ணீர் வருமுன், என் கண்களில் இரத்தமே பெருகிவிடும். உங்களை நம்பித்தான் ஒப்படைத்திருக்கிறேன். நீங்கள் தான் அவளுக்குத் தந்தை, தாய் எல்லாம்...!” என்னென்னவோ தயங்கித் தயங்கிக் கூறினார். அவர் கண்கள் பன்முறை நீரைச் சொரிந்தன. என் இதயம் என்ன இரும்பா கல்லா?

தான்

"மாமனார் வீட்டு வாழ்வு மரியாதை அற்ற வாழ்வு என்னும் எண்ணம் படைத்த நான் மாமனார் வீட்டிலே குடியேறினேன் என்றால் என் மாமாவின் அன்புள்ளம் ஒன்று காரணம். எத்தகைய குறைவுமில்லாது இன்பமாக வாழ்ந்தோம். வறுமை எங்களை எங்களை வாட்டவில்லை. வறுமை எண்ணம் இருப்பதுதானே கொடிய வறுமை. எங்களுக்குத்தான் அத்தகைய ஒன்றே இல்லையே.

சிரித்த அளவுக்கு அழவேண்டியதும் உலக இயற்கைதானே! இரவையும் பகலையும் அளந்து வைத்த இயற்கை இன்ப துன்பங்களை எடை போட்டு வைக்காமலா விடும்? இரண்டு ஆண்டுகள் கடந்தன. நிறைமதி ஒரு குழந்தைக்குத் தாயாகப் போகின்றாள் என்னும் பெருமிதத்திலே எங்கள் வீடு மிதந்தது அப்பொழுதினை நொடி நொடிதோறும் எதிர்பார்த்துக்