பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

இளங்குமரனார் தமிழ்வளம் - 8

காடு செல்வி, கொடு; நீ இப்பொழுது கொடுப்பது காபி இல்லே! தேன்” என்று கூறிக் கொண்டே அவள் கையில் இருந்த காபி வட்டையை வாங்கி என் உதட்டுக்குக் கொண்டு சென்றேன். சிரித்துக் கைகொட்டிக் கொண்டே, அம்மா முகத்தை நோக்கியது செல்வி! வெற்றிப் பெருமிதம் உண்டல்லவா!

6

“எச்சில் படுத்தியதைக் கொடுக்கலாமா? என்ன பிள்ளை' என்றார்கள் அம்மையார். அவர்கள் சொல்லில் கண்டிப்பும் கனிவும் சம அளவில் இருந்தன. நான் சொன்னேன்: “செல்வி தெய்வக் கொடை; அவள் எச்சில் தெய்வப் படையல்; வாழ்வே வெறுத்துப்போய் இருந்தது எனக்கு. வாழவேண்டும் - உலகுக்காக வாழ வேண்டும் - என்னும் படிப்பினையை இப்பொழுது பெற்றுக்கொண்ட புதியவனாகி விட்டேன். அதனைச் செயலுக்குக் கொண்டு வருவதற்குத் தெம்பு வேண்டுமல்லவா! அதற்குத் தெய்வப் படையல் அளிக்கிறாள் செல்வி; அவள் எச்சில் தேன் என்றேன். எளிதில் கிடைக்கும் தேன் அன்று;பன்னீராண்டுகளுக்கு ஒரு முறையே மலரும் குறிஞ்சிப் பூக்களிலே எடுத்து, சந்தன மரத்திலே சேர்த்துவைத்த தேன்’ என்றேன். செல்வியின் தாமரைக் கைகளைப் பிடித்து என் கன்னங்களில் அழுத்திக் கொண்டேன்."

(ஆறுமுகத்தின் வீட்டிலே நடந்ததாக இருந்தும் அவருக்குப் புதிய செய்தியாகவே இருந்தது. ‘மங்கலம்’ என்று அழைத்து அவரிடமும் வாசித்துக் காட்டி, “இப்படி நடந்ததா?" என்றார். “நினைத்து நினைத்து அழுவதற்காக இந்த ஒரு காரியத்தைத் தானா செல்வி செய்தாள். இவற்றை யெல்லாம் நினைவுபடுத்தி நெஞ்சைப் புண்ணாக்க வேண்டுமா? ஏதோ நடந்தது. கடிதம் எழுதியுள்ள செல்லப்பன் நல்ல மனிதன்; நன்றியுடையவன்; இன்னும் மறக்காமல் இருக்கிறான்” என்றார் மங்கலம். “ஆ ஆ ஆ! பேர்கூட நினைவிருக்கிறதா? செல்லப்பனா பெயர்” என்று கடைசிப் பக்கத்தைத் திருப்பிப் பார்த்தார் ஆறுமுகம். "ஆமாம், ஆமாம்! செல்லப்பன்தான்! ஊர்பேர்தான் எனக்கு நிற்பதே இல்லையே! உனக்கு இருக்கும் நினைவாற்றலுக்கு உங்கள் அப்பா மட்டும் படிக்க வைத்திருந்தால்... அடேயப்பா!" என்று செல்வி மீது ஏற்பட்ட துயரை று மாற்றினார் ஆறுமுகம். வெட்கத்தால் தலைகுனிந்து வெளித் திண்ணைக்குச் சென்றார் மங்கலம் அம்மாள். செல்லப்பன் வரைந்த கடிதத்தைத் தொடர்ந்து படித்தார் ஆறுமுகம்.)