பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

இளங்குமரனார் தமிழ்வளம்

8

"ஐயா, இக்கடிதத்தைப் பிரிக்குமுன், "இக்கடிதம் அன்பன் செல்லப்பன் எழுதியது. அவன் எனக்கு எத்தகைய கேடும் செய்யான். அவன் எழுதியுள்ளது என்னவாயினும் நிறைவேற்றி வைப்பதே என்கடமை; அவன் விருப்பத்தை நிறைவேற்றாமல் இருக்கமாட்டேன்; இஃது உறுதி" என்று நெஞ்சுக்கு நேராக உறுதி செய்துகொண்டு படியுங்கள். "செல்லப்பன் சொல்வது யாதோ? அதைச் செய்ய முடியுமோ? முடியாதோ?" என்னும் ஐயம் இருக்குமானால் அருள்கூர்ந்து கடிதத்தைப் பிரிக்க வேண்டாம். நெருப்பிலே போட்டு எரித்து விடுங்கள். இவ்வுடல் எரி நெருப்புக்கு ஆளாகவேண்டிய நேரத்திலே - என் ஒரே ஓர் எண்ணம் தாங்கிய இக்கடிதமும் அதற்கு இரையாகட்டும்.

என்னும் எழுத்துக்களைப் படித்துத் திகைப்படைந்தார், "வருவது வரட்டும்; வாக்குத் தவறேன்" என்னும் உறுதியுடன் கடிதத்தைப் பிரித்தார். மங்கலம் அம்மாள் இன்னும் ஒரு கடிதமா என்று ஆறுமுகத்தின் பக்கத்திலே உட்கார்ந்தார். கடிதத்தை உரக்கப் படித்தார்.)

66

"அன்புள்ள ஐயா, நான் கடமலைக்கு வந்து ஐந்தாண்டுகள் நிறைந்து ஆறாம் ஆண்டு நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது கழையாடும்’. கலைக்கூட்டம் ஒன்று இங்கு வந்து சேர்ந்தது. இக்கூட்டத்தினர் கோவிந்த நகரில் ஆடிவிட்டு இங்கு வந்தனர். கடமலையில் ஆடியபின், மந்திச்சுனை, மயிலாடும் பாறை, ஆலந்தளி வரைக்கும் சென்று திரும்பக்கூடிய கூட்டம்.

-

அக்கூட்டத்திலே ஒன்பது அல்லது பத்தே வயதுள்ள சிறுமி ஒருத்தியும் இருந்தாள். அவள் முகவாக்கும் பொலிவும் அக்கூட்டத்தில் இருந்தவர்களுக்குப் பெரிதும் வறுபட்டிருந்தது. பொதுவாக அன்று அந்தச் சிறுமியை - அவள் பெயர் பொம்மி என்பது பார்த்தவர்கள் அனைவரும் அவள்மீது இரக்கம் காட்டவே செய்தனர். ஆட்டப் பயிற்சி மிக்க ஒருத்தி தரையில் பலவகை ஆட்டங்கள் நிகழ்த்தினாள். இரண்டு கழைகளை ள ஊன்றி அவற்றின் உச்சியிலே கயிற்றைக் கட்டி வைத்து நடந்தாள்; கால்களை மடித்துக் கயிற்றின்மேல் வைத்துக் கொண்டு நகர்ந்தாள்; ஒரு வட்டிலைக் கயிற்றின்மேல் வைத்து நின்றுகொண்டு நகர்ந்தாள். அதன்பின் வட்டிலில் தலையை வைத்து கால்களை மேலே உயர்த்தித் 'தலைகீழாக நின்று காண்டு’ தலையாலே தள்ளிக் காண்டு சன்றாள். காடுமையான உயிர்ப் போராட்ட ளையாட்டையும்’ விளையாட்டாகவே செய்து முடித்தாள். அவள் ஒவ்வொன்றைச் செய்து முடித்து ஓய்வு கொண்டபோதும் பொம்மி அந்த