பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

இளங்குமரனார் தமிழ்வளம் - 8

சொல்ல முடியுமா? நான் இருப்பது செல்வி திருமணத்திற்குத் தடையாக இருக்கும் என்பதை அதுவரை உணரவில்லை. உணரச் செய்தது செழியன் கடிதம். அன்று வீட்டுக்கு வந்து படுத்தேன்; அதற்கு மேல் வெளியேறவே இல்லை. ஏன்? வீட்டுக்குள் நடந்து திரியவும் இல்லை. நோய்ப்பூச்சிகளு என் படுக்கை கொண்டாட்டமாகிவிட்டது. நன்றாக விளையாடட்டும் என்று மருந்து சாப்பிடுவதையும் விடுத்தேன். எப்படியோ வாழ்வை விரைவில் முடித்துக் கொள்ள வேண்டும். என் வாழ்வு எவ்வளவு விரைவில் முடிகின்றதோ அவ்வளவு விரைவில் செல்விக்கு நல்ல காலம் ஏற்பட முடியும் என்னும் முடிவுக்கு வந்துவிட்டேன். என்னால் வேறென்ன செய்ய முடியும்? மருத்துவத் தொழிலிலே ஊறிப்போன ஒரு குடும்பமே எனக்குள்ள நோய் கருதி, என் வளர்ப்புப் பிள்ளையைத் திருமணம் செய்ய மறுத்தது என்றால் மற்ற குடும்பங்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? நான் எப்படி என் பிள்ளையின் நல் வாழ்க்கைக்காகத் துடிக்கின்றேனோ அவ்வளவு துடிப்பும் தம் பிள்ளையின் நல்வாழ்வுக்காக அவர்களுக்கு இருக்கத்தானே செய்யும். "தொற்று நோயாளி பிள்ளையை மணந்து தொல்லைப்பட நேரிட்டு விட்டால்?” என்ற கவலை இருக்கத்தானே செய்யும்! நான் ஆத்திரப் படுவதற்கும் அன்புதான் காரணம்; அவர்கள் மறுப்பதற்கும் அந்த அன்புதான் காரணம். அவரவர் பக்கம் நீதி இருக்கிறது. அடுத்தவர்களைப் பற்றிக் குறை கூறுவது தான் நீதியற்றது என்னும் விதிக்கு வந்துவிட்டேன்.

என் வளர்ப்புப் பிள்ளை எனச் செல்வியை எண்ணி யிருக்க மாட்டார்களோ, என் சொந்த மகள் என்றே எண்ணி, பரம்பரை நோய் இவளுக்கும் பற்றிவிடும் என்று எண்ணி யிருப்பார்களோ என்றும் எண்ணினேன். ஆனால், “என் அம்மா, தாய் தகப்பன் இன்னார் இன்னார் என்று அறியாக்கழைக் கூத்துப் பிள்ளை என்றார். “அது பழைய குப்பை; அதைப்பற்றி நமக்கென்ன - பிள்ளை எப்படி?” என்று கேட்டார் அப்பா. என்று செழியன் கடிதத்தில் எழுதியிருந்தது என் சந்தேகத்தைத் துடைத்தது. என் உயிர் மேல் வாஞ்சை கொண்டு வேண்டு மானால் வேறு வேறு காரணங்கள் காட்டி மழுப்பலாம். ஆனால் என் சாவு அன்றிச் செல்விக்கு நன்மை எதுவும் தராது!

இந்நேரத்தே என் வரலாறு முழுமையும் ஒரு முறை சிந்திக்கிறேன், திருப்பிப் பார்க்கிறேன். அதன் முடிவு இதுதான். அறியாமையால் யான் என்னைப் பலமுறை துன்புறுத்திக்