பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

149

வேலை

புதியவன் வண்டிவிடுவதும் தொல்லையான யாகிவிடுகின்றது. அதை உருட்டிச் செல்வதும் சங்கடமான வேலையாகிவிடுகின்றது. இரு கைகளாலும் எவ்வளவு அழுத்திப் பிடித்தாலும் தன்மீது சாய்த்துக் கொள்கிறான்; அல்லது அதன் மீது சாய்ந்து மோதிக்கொள்கிறான்; இல்லையேல் இளைத்து அலுத்துத் தள்ளுகின்றான். இவ்வளவு ஏன்? நடை கற்கத் தொடங்கும் குழந்தை, நடை வண்டியைத் தள்ள என்ன பாடு படுகின்றது. நாட்கள் செல்லச் செல்ல நடைவண்டி அலறிச் சக்கரங்களும் தூள் ஆகுமாறு கயிற்றால் கட்டி இழுத்து. |க் கொண்டு ஓடுவது இல்லையா? பழக்கம் தானே காரணம்! இப்பழக்கம் முன்னவனிடம் இருந்தது. அவனுக்கு வேலைத் தொல்லையும் இல்லை; வெயில் தொல்லையும் இல்லை. பின்னவனுக்குப் பழக்கம் இல்லை. அதனால் அதனால் வேலைத் தொல்லையும் உண்டு; வெயில் தொல்லையும் உண்டு.

முன்னவனும் வண்டி தள்ள வந்த தொடக்கத்தில் தொல்லைப்பட்டது உண்டு. எவ்வளவோ கசப்பான வேப்பிலை யும் தின்று தின்று, பழக்கப்பட பழக்கப்பட, கசப்பே இல்லாத தாகித் தீனியும் ஆகிவிடுவதுபோல் தான் - பழக்கமாகி விட்டது. பின்னவன் புதிதாக வேப்பிலை தின்னத் தொடங்கியிருக்கிறான். வரவரப் பழக்கமாகிவிடும். அவன் பழக்கமாக்கிக் கொள்வதற்கு ஏற்ற உறுதி இல்லாதவனாக இருந்தால் பழக்கத்தையே விட்டு ஓட்டம் எடுக்க வேண்டியும் நேரலாம். நல்ல நண்பன் ஒருவன் கிடைத்தால் உள்ளத்தில் உறுதிப்பாடு இல்லாதவனையும் உறுதியுடையவனாகச் செய்துவிடலாம். போட்டியும் பொறாமையும் குடிகொண்ட ஒருவனாக இருந்தால் ‘புதியவனை’த் தொழிலை விட்டு ஓடவும் படுத்திவிடலாம்.

66

இருளாண்டி.புதுப் பழக்கம் இல்லையா உனக்கு! கொஞ்சம் நாட்கள் சென்றால் சரியாகி விடும். நானும் ஆரம்பத்தில் இப்படித்தான் பெரும்பாடு பட்டேன். உனக்காவது வயிற்றுப் பாட்டுக்கு வழி இருக்கிறது. எனக்கு அதுவும் இல்லாமல் நடுப்பகல் வரை வண்டி இழுத்து ஏதோ காசு கிடைத்தால் கஞ்சி வைத்துச் சாப்பிட்டதும், அதற்கு வழியில்லாமல் உண்ணா விரதம் இருந்ததும் உண்டு. இன்று கவலையற்ற சாப்பாடு சாப்பிட முடிகிறது. நான் கட்டை வண்டி இழுக்கும் இத் தொழிலை விட முடியாவிட்டாலும் என் பிள்ளைகளாவது ஒரு கும்பிடு போட்டுவிட்டு விடலாம் என்னும் நிலைமை ஆகிவிட்டது. எப்படியோ நாள்தோறும் கொஞ்சம் கொஞ்சம்