பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

இளங்குமரனார் தமிழ்வளம் - 8

தெரியாதவன் வளர்த்து விடுவானோ என்று மறுத்து விட்டார் கிழவர். இச் சமயம்தான் குடும்பம் கலகலக்கத் தொடங்கியது. ஓயாச் சண்டையைக் கண்டு நொந்த தாய்க்கு மணிக் காளையிடம் இருக்கும் பொருளை வாங்கி இந்தக் கிழவர் இவனிடம் எறிந்து விட்டால் என்ன? என்னும் எண்ணம்கூட ஏற்பட்டது. வரிந்து கட்டும் சண்டைக்கு ஆளாகியும் கிழவர் உறுதியாகவே இருந்தார். 'என் காலம் எவ்வளவு நாளோ? கிழவிக்காக வேண்டும். என் மகனை நம்புவதற்குப் பதில் ஆற்றையோ குளத்தையோ நம்புவது மேல்" என்று கூறிவிட்டார். நெடு நாட்கள் ஆகவில்லை.

66

"ஒருநாள் பகல் மூன்று மணி இருக்கும். வண்டியை நிறுத்தி வைத்து, அதன் கீழே உட்கார்ந்தார் கிழவர். அதிகக் களைப்பு ஏற்பட்டிருக்கிறது. உறங்கி விட்டார்.

66

பாரம் இருந்ததா?” என்று

ஏதாவது பாரம்

தான் இருளாண்டி.

66

இடைமறித்

'ஓ ஓ! நான் சொன்னதை நினைத்துக் கொண்டாயா? உள்ளொன்று உதட்டிலொன்று என்பது அவர் அறியாதவை. பாரம் எதுவும் இல்லை. நல்ல உறக்கம். அந்நேரம் ‘லாரி’ ஒன்று வந்திருக்கிறது. வண்டி மீது மோதி - வண்டி உருண்டு - ஐயோ! அதன் கீழே கிடந்த கிழவர் தலையும் உருண்டு விட்டது.

“ஐயோ! செத்தே போனாரா? அட அநியாயமே” என்றான் இருளாண்டி.

ப்பொழுதுதான் நீ லாரிக்காரனைக் கண்டபோது காட்டிய கடுகடுப்பின் காரணம் புலனாகின்றது' என்றான். சற்று நேரம் அமைதியாக இருந்த இருளாண்டி “கிழவர் போன பின்னாவது மகனுக்கு அறிவு வந்ததா? பழைய கதைதானா?' என்றான்.

கிழவர் அமைதியாக வாழ்வை முடித்துக் கொண்டார். அவருக்கு மைந்தன் என்ற முறையில் மணிக்காளை இருந்தான் என்று சொல்வது ஒழிய வேறொன்றும் சொல்ல இல்லை. லாரிக்காரனை வெருட்டி வெருட்டிப் பணம் பிடுங்கித் தின்பதுதான் மகன் தொழிலாயிற்று. பணம் பறிப்பதற்காகப் போலீசுத் தரப்பில் இருந்த நேர்மையைக் கூட மாற்றியடித்தான். எப்படியோ அவன் கதை நடந்து கொண்டுதான் இருந்தது.

தள்ளாத வயதில் கணவனை இழந்த கிழவிக்கு மணிக்காளை தேறுதலாக இருந்தான். “என்னைப் பெற்ற அம்மா இல்லை.