பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

165

போன்று காட்டி, மண உறுதிக்குப் போகும் நாளைத் தெரிந்து கொள்ள நின்றேன். அப்பொழுது வேறு யாரும் இல்லை. நான், மணிக்காளை, மணமகள் வீட்டிலிருந்து வந்த பெரியவர், பெரிய கணக்குப்பிள்ளை ஆகிய நான்கு பேருந்தான் இருந்தோம்.

“தம்பி! உங்களிடம் தனித்துப் பேச வேண்டிய செய்தியாக இருக்கிறது. இவர்கள்..." என்றார் வந்த பெரியவர். உடனே கணக்கரைப் போகச் சொன்னான் மணிக்காளை. 'இந்தத் தம்பியும்' என்று என்னைச் சுட்டிக்காட்டினார். “தவறு செய்து விட்டோம் நாமே குறிப்பறிந்து சென்றிருக்க வேண்டும்” என்று சென்றிருக்க வேண்டு எண்ணினேன். “அவனுக்குத் தெரியாமல் பேச வேண்டிய மறைவுச் செய்தி ஒன்றுமில்லை" என்றான் மணிக்காளை. "இல்லை; இல்லை; நீங்கள் பேசுங்கள். நான் பிறகு வருகிறேன்” என்று நடந்தேன்.

"கொஞ்ச நேரங்கழித்து மணிக்காளை எனக்குஆளனுப்பினான். நான் போனேன். “பெண் வீட்டிலிருந்து பெரியவர் வந்தாரே என்ன சொன்னார் என்பது தெரியுமா? வேடிக்கையான உலகமப்பா! இந்த உலகத்திற்கு உண்மை அறிவோ, நிலையான அறிவோ இல்லை போல் இருக்கிறது என்றான். இடை யிடையே பல தடவைகள் சிரித்தான்.

ஏதோ ஓர் அதிர்ச்சியான ஒரு செய்தியைப் பெரியவர் சொல்லிப் போயிருக்கிறார் என்றும், அதனைப்பற்றி மணிக் காளையின் முகக்குறி காட்டவில்லை என்றாலும் சொல் காட்டுகின்றது என்றும் எண்ணினேன்.

“வந்தவர் இப்பொழுது திருமணம் செய்ய வசதி இல்லை என்றும். கொஞ்ச காலம் செல்ல வேண்டும் என்றும், அது வரை எதிர்பார்த்திராமல் வேறு எங்கேனும் பெண் பார்த்துக் கொள்வது நலம் என்றும் சொல்லிப் போனார் - அதாவது பெண் தரமுடியாது என்பதுதான் முடிவு” என்றான் மணிக்

காளை.

66

66

இந்தச் சொற்களை என்னால் தாங்க முடியவில்லை. தலை சுற்றுவது போல் இருந்தது. மணிக்காளை ள ஆவது ஆகும்; போவது போகும்; வருந்த முடியுமா?” என்று என்னை தேற்றினான். ஏன் உன்னைப் பார்க்கிலும் பணக்காரன் எவனும் வந்துவிட்டானா? அப்படி யிருந்தால் தான் இத்தகைய ஏற்ற மாற்றங்கள் நடக்கும். பெரியவர் என்ன சொன்னார்?” என்று வற்புறுத்தினேன்.