பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

167

சொல். இதனைப் பல தடவைகள் நாம் பேசியிருப்பது நினை விருக்கும். தெளிவு செய்து கொள்வதற்காக எத்தனையோ பேர்களின் வாழ்க்கைகளையும் அலசிப் பார்த்திருக்கிறோம். "கைவண்டி இழுப்பவன் கையிலே திருக்குறளும், வாயிலே வாய்மையும், நெஞ்சிலே அறமும் இருந்தால் வாழமுடியுமா?" என்று நம்மை எத்தனைபேர் கேலி செய்தார்கள். வாழத் தெரியாதவர்கள் என்று எள்ளி நகையாடினார்கள். அதை நினைக்க நினைக்க எனக்கு இன்றும் வேடிக்கையாக இருக்கிறது என்றான்.

“மக்களைக் கொண்டு பெற்றோர் தகுதியை முடிவு கட்டினால் பொன்னுத் தாத்தா நிலைமை என்னவாக இருக்கும்? சிறிதளவாவது மதிக்க முடியுமா? அவர் விட்டுச் சென்ற செல்வம், செயல், தொண்டு, அறிவு, பண்பு, புகழ் என வைத்துச் சென்ற எல்லாவற்றையும் (எச்சத்தை யெல்லாம்) எண்ணிப் பார்ப்பதல்லவா சரியாகும்” என்றேன்.

66

"ஆம்; நான் சொல்லப் போவதற்கு ஏற்ற முகவுரையைத் தான் நீ கூறினாய்; பெரும்பாலும் நான் எண்ணுவதையே நீயும் எண்ணுகிறாய்; நான் பேசப்போவதையே நீயும் பேசுகிறாய். இது நம் ஒன்றுபட்ட உள்ளத்தைக் காட்டுகிறது” என்று பேசினான்.

66

“தாத்தா வீட்டிற்குப் போயிருந்தாயா? ஏதாவது செய்தி உண்டா? அவர் மகனைப் பற்றி ஏதாவது கேள்விப்பட்டாயா?” என்றான்.

எனக்குப் பல செய்திகள் தெரிந்திருக்கின்றன என்றும், அவற்றைப் பற்றி நான் அவனிடம் கலந்து பேசவில்லை என்றும் அவன் கேள்விகளால் அறிய முடிந்தது. பின்பு, அவன் எதையோ சொல்ல விரும்புகிறான் என்றும், அதில் ஏதாவது எனக்குத் தெரியுமா என்றும் மேலோட்டம் பார்க்கிறான் எனத் தெளிந்தேன்.

“பெண் வீட்டார் என்னைப் பற்றித் தவறான கருத்துக் கொள்ளுமாறு செய்தவன் தாத்தாவின் மகன்தானாம். அதை நேற்றுத்தான் அறிந்தேன்” என்றான்.

66

என்ன இது

உண்மையா?

நம்பிக்கையானவன்

சொன்னானா?” என்றேன்.

"தெளிவில்லாத ஒன்றைச் சொல்வதால் யாருக்கு என்ன நன்மை? பொழுத வீணாவது அன்றி வேறென்ன உண்டு'