பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

இளங்குமரனார் தமிழ்வளம் - 8 $

போலி மானத்தை எண்ணிக் கெட வேண்டாம்; இருவரும் போவோம்” என்றான்.

66

'இருவரும் போனோம்; கிழவி வீட்டின் முன்னால் நின்றாள். எங்களைக் கண்டபோது வலுவாகச் சிரிப்பு வரவழைத்துக் கொண்டாள். அது நடிப்பே அன்றி உண்மையன்று என்பது தெளிவாக தெரிந்தது. அகத்தின் அழகு முகத்தில் தெரியாதா? வீட்டின் உள்ளே யிருந்து புலம்பல் பலவாறாகக் கேட்டது. அவன் நிலைமை எப்படியாகுமோ? நம் கையில் இல்லை என்றாள் கிழவி. அவளது சுருக்கம் விழுந்த கன்னங்களைக் கண்ணீர் துளிகள் நனைத்தன. மணிக்காளை எதுவும் பேச வில்லை. அமைதியாக உள்ளே சென்றான். நானும் அவனை தொடர்ந்தேன்.

66

எங்களைக் கண்டதும் தும் ஓட்டம் பிடிக்க பிடிக்க ஆரம்பித் தான் தாத்தாவின் மகன். நாங்கள் தடுத்து நிறுத்தினோம். நாய் கடித்த இடங்களிலிருந்து இரத்தமும் சீழும் வடிந்து கொண்டிருந்தன. யாரையும் நெருங்கவிடாமல் செய்திருக்கிறான். அவன் "ஐயோ! நான் குத்தவில்லை; கொல்லவில்லை; என்னை அடிக்க வேண்டாம்; கொல்ல வேண்டாம்” என்று கத்தினான். தெரு முழுதும் கேட்குமாறு அலறினான். உனக்கு ஒன்றும் இல்லை. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்; பயப்படாதே தே" என்றோம். “அவனைக் கொன்றதற்கு என்னைப் பிடிக்கவா? போ. வெளியே போ!" என்று விழுந்து புரண்டான்.

66

இப்படித்தான் யார் வந்தாலும் சொல்கிறான். ஒன்றும் புரியவில்லை. என் தலைவிதி இன்னும் என்ன வெல்லாம் பார்க்க வைத்திருக்கிறதோ” என்று நொந்தாள்.

66

“உன்னைக் காப்பாற்றாமல் மணிக்காளை மணிக்காளை அனுப்பி விட்டான் என்னும் கோபத்தால் இவ்வளவு காரியங்கள் செய்திருக்கிறான்” என்று நடந்ததை விவரமாகக் கூறினேன்.

நெடுநேரம் அவள் பேசவில்லை; எல்லாம் என்னால் ஏற்பட்டது. எந்தப் போராட்டத்தையும் சமாளிக்கலாம்; ஆனால் மனப் போராட்டத்தைச் சமாளிப்பதுதான் அரிது. அந்த மனப்போராட்டம் செய்த சீரழிவுதான் இது” என்று உண்மையாக உணர்ந்து சொன்னாள் கிழவி.

கிழவி தன் மனப் போரைச் சொல்வாள் போல் இருந்தது. அது அப்படிப்பட்ட வேளையல்லவா! ஆனால் மணிக்காளையை வைத்துக் கொண்டு சொல்ல மாட்டாள் என்பதும் உணர்ந்தேன்.