பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

177

இவற்றுள் ஒன்றில் ஈடுபடாமல் இருக்க அவனால் முடியாது. அப்படிப் பழகி விட்டான்.

66

'இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு”

என்னும் குறள் நெறி அவன் செவியில் விழ வாய்ப்பே இல்லை. அப்படியே விழுந்தாலும் அதனைச் சொல்லியவனைச் ‘சும்மா’ விடப்போவதுமில்லை. அவன் பரம்பரையையே சந்திக்கு இழுத்து விடுவான்.

ஒரு நாள் மணிமுத்து, ஒரு தோட்டத்திற்குப் போய்த் தேங்காய்கள் சில பறித்தான். பறிக்கும் போது தோட்டக்காரன் கண்டுவிட்டான். அவனுக்குக் கோபம் மிகுதியாயிற்று. தூரத்திலிருந்து வரும்போதே கத்தினான். பக்கத்தில் வந்தபோது மணிமுத்தைப் பார்த்ததும் ‘ஏன் திட்டினோம்' என்று பதறிப் போனான். மெதுவான குரலில் “மணிமுத்து, இறங்கு கீழே! இப்படியா செய்வது? ஆளில்லாத வேளையில் இப்படிக் காயை வெட்டுவது உனக்கே நன்றாக இருக்கிறதா? வா, உன் அப்பா வினிடமே கேட்கலாம்’ என்று அழைத்துச் சென்றான். தோட்டக்காரன் நடந்து கொண்ட அளவு ஒருவன் பொறுமையாக நடந்திருக்க முடியாது. இத்தோட்டக்காரனும் மூக்கன் மகன் மணிமுத்து தவிர்த்து தவிர்த்து இன் இன்னொருவனிடம் இப்படி நடந் திருப்பான் என்றும் எதிர்பார்க்க முடியாது.

நீ

மூக்கன் தோட்டக்காரனுக்கு என்ன பரிசு தந்தான்? “நீ திருட்டுப்பயல்; உன் அப்பன் திருட்டுப்பயல்; உன் பாட்டன் திருட்டுப்பயல்; உன் பரம்பரையே கொள்ளைக் கூட்டம். ஒரு பயலிடம் யோக்கியதை உண்டா? தோட்டம் வைத்திருக்கி றானாம் தோட்டம். இவன் ஒருவனுக்குத்தான் அதிசயமாகத் தோட்டம் இருப்பது போல! ஏய், நீ பிச்சைக்காரப் பயல்; இந்தப் சின்னப்பயல் தெரியாமல் தேங்காயைப் பறித்ததற்குக் கையும் களவுமாகப் பிடித்துக் கொண்டு வந்து விட்டாயே - நீ செய்வதைச் செய்! அற்பனுக்கு வாழ்வு வந்தால் இப்படித் தான்” என்றான். கூட்டம் திரண்டு விட்டது. கூடியவர்களும் "தோட்டக்காரன் இதனை இவ்வளவு பெரிது பண்ணியிருக்க வேண்டாம்” என்று ஒத்த முடிவு கூறினர். “தோட்டக்காரன் என்ன செய்வான்? வாயை மூடிக் க்கொண்டு போனான். இத்தகைய மூக்கனின் இல்லறம் எப்படி நயமாக நடந்திருக்கக் கூடும் என்று கற்பனை செய்து கண்டு கொண்டிருக்கலாம்.