பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

3

கந்தப்பனுக்கு ஒரு மகள் இருந்தாள். அவளுக்கு வாய்த்த கணவன் பணம்பிடுங்கி. “பணம் பணம்" என்று அரித்துக் கொண்டே இருப்பான். மணமேடையிலேயே, நூறு பவுன் கழுத்தில் இருக்கிறதா என்பதை நிறுத்து அளவிட்டுப் பார்த்துத் தாலிகட்டிய செயலே அவன் பணத்தாசையை எடுத்துக் காட்டப் போதுமானதாகும்.

திருமணத்தின் பின்னும் விட்டானா? எப்படி எப்படியோ சொத்துகளைத் தொலைத்தான். தொலைத்ததைப் பெற ஒரே வழி மாமன் கந்தப்பனை வாட்டுவது என்று கருதி விட்டான். அதனால் கந்தப்பனிடம் பணம் கறந்து கொண்டே ருந்தான். மகள் எப்படியாவது வாழவேண்டுமே என்ற ஆசையால் கேட்டதை எல்லாம் கொடுத்துக்கொண்டே இருந்தான் கந்தப்பன்.

கேட்ட கேட்டபொழுதுகளிலெல்லாம் ஆயிரம் ஆயிரமாய் எப்படிக் கொடுக்க முடியும்? கந்தப்பன் சம்பளமே மாதம் எண்பது ரூபாதானே! ஆம்! முதலாளி பணத்தைச் சுரண்டியே கொடுத்தான். மகள் வாழவேண்டுமென்ற ஆசை. உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யுமாறு தூண்டிவிட்டது.சுருட்டினான்; சுருட்டினான்: சுருட்டிக்கொண்டே இருந்தான்.

இவன் எழுதிய கள்ளக் கணக்குக்கு எல்லை இல்லை. பொய்யான இரசீதுகள் பத்திரங்கள் கட்டுக்கட்டாகக் குவிந்தன. ஒன்றுக்குப் பத்தாகச் செலவு ஏறியது. நூற்றுக்குப் பத்தாக வருமானம் குறைந்தது. கடன் நாள் தவறாமல் ஆயிரம் ஆயிரமாக இலட்சக் கணக்கில் ஏறிவிட்டது.

குமரவேலுக்கு உண்மை நிலைமை அவ்வளவு எளிதில் தெரிந்துவிடவில்லை. கந்தப்பன் தான் கண்ணில் பொடியைத் தூவி மறைத்துக் கொண்டிருக்கின்றானே! ஆனாலும் எவ்வளவு நாட்களுக்குத்தான் மறைத்துவிட முடியும்?

66

ஒரு நாள் பத்துப் பதினைந்துபேர் இவ்வளவு தர வேண்டும். அவ்வளவு தரவேண்டும்” என்று குமரவேலைத் தேடிவந்தனர். உதவி வேண்டி வந்தவர்களை அல்லாமல் இப்படிக் கடன் கேட்டு வந்தவர்களைக் கண்டறியாத குமரவேல் மனம் ஒடிந்துவிட்டார். கந்தப்பனை அழைத்து விவரம் கேட்டார்.. களவு கை வந்தவன் கணக்குக் காட்டவா மாட்டான்? கணக்கைப் புள்ளி விவரமாகக் காட்டிவிட்டான். "முதலாளி! நீங்கள் அறிந்து வருந்தாதபடி, கடனை எப்படியும்