பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

இளங்குமரனார் தமிழ்வளம் - 8 $

போகமாட்டேன்” என்றான் மூக்கன். அந்நேரம் மணிமுத்தைக் கூட்டிக் கொண்டு வந்தான் சென்னிமலை.

‘மணிமுத்து' என்று சொல்லி ஓடிப்போய் அணைத்துத் தழுவினான் மூக்கன். “அறிவில்லாமல் செய்து விட்டேனடா! புத்தி கெட்டவன் நான். நல்ல வேளை ஓடி ஒளிந்து பிழைத்துக் கொண்டாய்” என்றான். இவன் உயிரைத் தந்தவன் சென்னி மலைதான் என்று நடந்ததைக் கூறினாள் காத்தாயி. சென்னி மலையை நன்றியறிதலுடன் நோக்கினான் மூக்கன்.

66

குடிகெட வேண்டிய நேரம்; நல்ல வேளை; அப்படியாகி விட வில்லை; இனிமேலாவது இந்த வெறி வேண்டாம்" என்றான் சென்னிமலை. காத்தாயி கையெடுத்துக் கும்பிட்டாள். பெற்றவள் அல்லவா!

சென்னிமலை! கோபம் குடியைக் கெடுக்கும் என்பதை அறிந்து கொண்டேன். இனி ஒரு நாளும் கோபப்பட மாட்டேன்; குடிக்க மாட்டேன்; சேவற் ‘சண்டைக்குப் போக மாட்டேன்; சூதாட மாட்டேன்” - மூக்கன் உணர்ச்சியுடன் பேசினான்.

66

ஆரம்பத்தில் இவற்றைக் கடைப்பிடிக்கச் சங்கடமாகக் கூட இருக்கும். ஆனால் பழக்கத்திற்குக் கொண்டு வந்து விட்டால் எளிதாகி விடும்; நன்மையும் ஆகிவிடும்” என்று கூறிப் புறப்பட்டான் சென்னிமலை.

66

“ஐயா, பால் குடித்துப் போங்கள்” என்று ஒரு குவளையை நீட்டினாள் காத்தாயி.

“எனக்கா பால்” என்றான் சென்னிமலை.

66

ஆம்; நீங்கள் என் வயிற்றில் பால் வார்த்தீர்கள். இந்தப் பாலையாவது சாப்பிட்டுப் போக வேண்டாமா?” என்று காத்தாயி சொல்லும் போது “ஆம் ஆம்! குடியுங்கள்” என்று வற்புறுத்தினான் மூக்கன்.

அப்பொழுது மெய்யப்பன் மிகவிரைந்து வந்து சேர்ந்தான். “காத்தாயி, நீ கணக்கப் பிள்ளையினிடம் சொல்லி 'ஊரெல்லாம் தூற்றி விடுவாய் என்று கடைக்கு ஓடினேன். அவன் “நான் இப்பொழுதுதான் உங்களைத் தேடி வந்தேன். வீட்டில் இல்லை என்று கேள்விப் பட்டுத் திரும்பினேன். வரும் வழியிலே காத்தாயி சொன்னாள். விரைவில் உங்கள் கணக்கை மெய்யப்பன் கொடுத்து விடுவார், நீங்கள் கவலைப்பட வேண்டாம். தேடிவர வேண்டியிராது' என்றாள். அதற்குள் நீங்கள்

இனி