பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

187

திருக்கிறீர்கள் போல் தெரிகிறது முடியுமா? எல்லாராலும் முடியுமா?

வடி

அப்படி இல்லை அண்ணே! நான்

கண் ணாடிப் புட்டிக்குள் தோலைப் போட்டு வைத்திருப்பதற்குக் காரணம் உண்டு.

பான்

என்ன தம்பி, அப்படியானால் நான்

சொல்கிற படி இல்லை.

வடி

இல்லை; நான் ஒருநாள் சாலை வழியே போய்க்கொண்டு இருந்தேன்; அவசரமான வேலை; ஓட்டமாகப் போனேன் மருத்துவரை அழைத்து வரவேண்டிய அவசியம்... : அப்பா நோயில் இருந்தார்களே...

பொன் அப்பொழுதா?

வடி பொன்

வடி

..

ஆமாம் ஆமாம்! அப்பொழுதுதான்.

சரி தம்பி, விரைவாக ஓடினீர்கள்...

அந்த நேரத்தில் பாருங்கள்.

( காட்சி மாற்றம்)

காட்சி - 2

-

(வடிவேல் ஓடிவந்து வாழைப்பழத் தோலால் வழுக் குண்டு கீழே விழுகின்றான்.)

வடி

ஆ! ஐயோ! என்ன தொல்லை! சே! சே! இப்படியா வழுக்கும்? ஐயையோ... அவசரம் அல்லவா! கால் வரமாட்டேன் என்கிறதே! அப்பாவுக்கு நோய்... மருந்து வாங்கவும் மருத்துவரை அழைக்கவும் வந்த எனக்கு இப்பாடு... அப்பா!...அப்பா!.. அப்பா!... அப்பா!... ஐயோ!...

(எழுந்திருக்க முயல்கிறான்; முடியவில்லை)

தேள் கடிக்கு மருந்து தேடப்போன இடத்திலே பாம்புக் கடிக்கு ஆளானதுபோல அல்லவா இருக்கிறது. ஐயோ! இடுப்புப் போய்விட்டதா? எந்தப் பாவிப்பயல் எனக்கு என்று இந்த வாழைப்பழத் தோலைப் போட்டானோ? அவன் விளங்குவானா? ஆ! ஐயோ! வலிக்கிறதே! சாலை என்றால் அவன் சொந்த நிலமா? எத்தனை பேர் போவார்கள் வருவார்கள்? சே... சே! இந்த நாட்டில் இருக்கிறவர்களுக்கு

6