பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

பொருந்துவதா? பெருமை தருவதா? இல்லவே

என்பதை நீ அறிவாய்?

66

இவர்கள்தான்

கொடியவர்களா?

205

ல்லை

சய்

தீமை செய் வதையே தொழிலாகக் கொண்ட குடிவழி வந்தவர்களா? இரப்பவர்க்கு இல்லை என்று கூறாமல், இருப்பது அனைத்தும் தந்து புலவர் தோழனாய், இரவலர் புரவலனாய், கலைஞர் காவலனாய், பாணர் புதையலாய் விளங்கிய வள்ளல் காரியின் மைந்தர்கள் அல்லரோ! இவர்கள் மேல் உனக்கு உண்டான சினந்தான் என்ன? உன் புலமைக்கும், புகழுக்கும் என்றால் உன் விருப்பம்போல் செய்" என்றார்!

து தகும்

புலவர் துணிவை மக்கள் பாராட்டினர். மன்னன் மதித்தான்; அறம் உணர்ந்தான்; அருள் கொண்டான்; இளைஞர்களோ உயிர் கொண்டார்; புலவரோ புகழ் கொண்டார்! தமிழகம் தனக்கு நேர இருந்த களங்கம் ஒன்றைத் துடைத்துக் கொண்டது! லக்கியம் - புறநானூறு புறநானூறு - அருமையான பாமணி ஒன்றைப் பெற்றுப் பொலிவு கொண்டது! குறள் வாழ்வு ஓர் இலக்கியம் கொண்டது.

"ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர்.’

(மேலும் மேலும் உயர்வோம் என்று விரும்பி முயலுகின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விடுதல் வேண்டும்.)