பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

207

இவற்றை எண்ணிப் பார்க்கும் நெஞ்சத்தே ‘மானம்' எது என்பது புலனாகாமல் போகாது. உயிருக்காக மானத்தை விடுவதா? மானத்திற்காக உயிரை விடுவதா? என்னும் இரு வேறு வினாக்களுக்குக் கிடைக்கும் விடையைக் கொண்டதே மானத்தின் வாழ்வும்; தாழ்வும். 'மானம் அழிந்தபின் வாழாமை இனிது' என்பார் மொழியும், மானத்தை விட்டும் உயிர் வாழ நினைவார் நினைவும் எண்ணிப் பார்க்கத் தக்கதேயாம்.

மானம் என்பது என்ன?

தன் நிலைமையில் தாழாமையும், தாழ்வு வந்தால் உயிர் வாழாமையுமே மானம்! இம் மானம் போற்றி ஒழுகப் பெறுகிறதா? போற்றுவோர் என்றும் போற்றித்தான் வாழ் கின்றனர். போற்றாதோர் என்றும் போற்றாதுதான் இழி கின்றனர்.

ழி

ாமல்

பசுவொன்று நீர் வேட்கையால் நடக்கமாட் நடக்கின்றது; வழியிலே கிணற்றில் ஒருவர் நீரெடுக்

கின்றார்; அவரிடைச் சென்று இப் பசுவிற்கு நிர் வேட்கை யுளது; அருள்கூர்ந்து நீர் தருக என்று கேட்டிரந்து நீர் ஏற்றுப் பசுவைப் காப்பதிலும், தன்முயற்சியால், நிர்கோலி, பசுவிற்கு அளிப்பது பெருமையானது: முயற்சி சிறப்பைக் காட்டுவது; அன்றி நீர் இரந்து நிற்பது நாவிற்கு இழிவு தருவது.

“ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு

இரவின் இளிவந்தது இல்

99

என்பது வள்ளுவம். இதனை வாழ்வில் கொள்வோர் எத்

துணையர்?

நீர் வேட்கை மிகக் கொண்டுள்ளான் வேந்தன்; பகைவன் சிறைக் கோட்டத்துள் விலங்கு பூட்டப் பெற்று அடைக்கப் பெற்றுள்ளான்; வற்றா வளம் பெருகு ஆறுகள் அவன் நாட்டில் மிகவுண்டு; ஆனால் பகைவன் சிறையானபின் அவ்வாற்று நீர்ப் பெருக்கு கிட்டுமா?

பகைவன் தந்த உணவை வெறுத்தான்; நீரையும் மறுத்தான்; நாட்கள் சில சென்றன; தாங்க முடியா வேட்கை; தன்னை அறியாமலே கேட்டுவிட்டான்:- “ஏவல! தண்ணீர் தா”

ஏவலன், சிறைக்குள்ளிருக்கும் காவலன் சிறப்பினை அறிந்தவன் அல்லன். மற்றையோரைப் போலவே, தப்பாகக் கணக்குப் போட்டுவிட்டான். பணிவும் இன்சொலும் இன்றி,