பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

35

மூன்று போடு போட்டார். தாவிப்பிடித்து அணைத்துக் கொண்டான் நாகப்பன்.

"நாகப்பா! உனக்கு ஏன் நாகப்பன் என்று பெயர் வைத்தேன் தெரியுமா? உன் நொண்டித் தாத்தாவின் பெயரடா, உன் பெயர்! நாகையா செய்த செயற்கரிய செயல் ஒன்றுக்காகவே அவர் பெயரை உனக்கு வைத்தேன்” என்றார் டாக்டர் அரசு.

66

“என் பெயர் நாகையாவின் நினைவுப் பெயரா?” என்று வியப்போடு கேட்டான் நாகப்பன்.

66

"இதோ பார்! என்று சொல்லிக்கொண்டு அரசு எழுந்து சென்றார். ஒரு படத்துடன் திரும்பினார். இந்தப்படம் வாயிலின் முகப்பில்தான் இருந்தது. ஆனால் இதனைக் காணக் காண என்னால் வேதனை தாங்க முடியவில்லை. இதனைப் பெட்டியினுள் போட்டு மறைத்து விட்டேன். வெளியே எடுப்பதே இல்லை. இது யார் படம் என்று நினைக்கிறாய்? உன் நொண்டித் தாத்தா படம். "நொண்டித் தாத்தா படமா? அவரா இப்படி இருக்கிறார்?”

66

"ஆம், நல்ல காளைப் பருவத்தில் அவர் இப்படித் தான் இருந்தார்.”

“என்ன உடல் வாய்ப்பு! இவர் நொண்டியானது ஏன்?”

66

ஏனா? இந்தப் பாவியால்தான்! எனக்கு அப்பொழுது வயது ஏழு. குறுக்குச்சாலையைக் கடந்து கடைக்கு ஓடினேன். சாலையைச் சிறிதும் பார்க்கவில்லை. காடுமையான விரைவில் மோட்டார் ஒன்று ஓடி வருவதைக் கண்டு கலங்கினேன். திக்குமுக்காடி நெளிந்தேன். காரோட்டியும் எவ்வளவோ முயன்றான். ஆனால் அவன் வளைத்துத் திருப்பிய பக்கமே நானும் ஓடினேன். ஆம்! நான் மோட்டார் சக்கரங்களுக்கு இடையே மாட்டிக்கொள்வது தவிர்த்து வேறு வழியே இல்லை. அப்போழுது அவ்வழியே வந்திருக்கிறார் நாகையா! தன்னுயிரைப் பொருட்படுத்தாது உள்ளே பாய்ந்து என்னைத் தூக்கித் தூர எறிந்தார்! பாவம், அவர் காலுக்குக் கீழ்க் கிடந்த வாழைப்பழத்தோல் ஒன்று வழுக்கிவிட நாகையாவின் கால் ஒன்று மோட்டார் சக்கரத்திற்கு இடையே மாட்டிக்கொண்டு நைந்துவிட்டது. எனக்கு உயிர் தந்த அந்த உத்தமர் இந்தப் பாவி யாலே காலை இழந்தார்; நொண்டியும் ஆனார்” என்று பெருமூச்சுகளுக்கிடையே பழங்கதையைச் சொன்னார் டாக்டர் அரசு. அமைதி நிலவியது சிறிது நேரம்.