பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

6. மேதை மாதவன்

இவன் யார்?”

“இவன் என் மகன் ஐயா!”

வனை அழைத்துக்கொண்டு வந்தது?”

“இவனுக்கு என் வேலையைத் தந்துதவ வேண்டும் என்று தங்களுக்கு மனுச் செய்திருந்தேன். 'உன் மகனை நேரில் கூட்டிக் கொண்டு வா' என்று கட்டளை வந்தது. அதனால் அழைத்துக் கொண்டு வந்தேன். எனக்கு வயதாகிவிட்டது. என் கண்ணுள்ள போதே என் மகனுக்கு வேலைகிடைக்க உத்தரவு ஆகவேண்டும்.' “சரி, இவன் என்ன படித்திருக்கிறான்?”

66

‘இ இரண்டு மூன்று ஆண்டுகள்தான் பள்ளிக்கூடம் போனான். என்னோடு பழகிக்கொண்டே வருவதால் வேலையில் அனுபவம் உண்டு.’

“இவன் பெயர்?”

“மாதவன்”

"மாதவா! பதினேழு பைசா, எத்தனையணா, எத்தனை

பைசா?”

“பதினேழு பைசாவா; ஒரு அணா ஒன்பது பைசா.”

"முட்டாள்; பதினேழு பைசாவுக்கு இத்தனை அணா இத்தனை பைசா என்றுகூடத் தெரியவில்லை. இவனுக்குக் கிராம அதிகாரி வேலை வேண்டுமாம். இந்த முட்டாளுக்கு நீர் வேண்டுமானால் வேலை தருமாறு கேட்கலாம்; ஊர், உலகம் ஒப்பவேண்டாமா? இரண்டு மாடுகளை வாங்கிவிடும்;

மேய்த்துத் திரியட்டும்

66

"ஐயா எனக்கு ஒரே மகன். இவனுக்கு வேலை இல்லை என்றால் என் பரம்பரை வேலை போய்விடுமே என்ன செய்வேன்?