பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

41

மாதவன் எண்ணம் மேற்படிப்பில் இருந்தது இருந்தது அல்லாமல் வேலையில் இல்லை.

இதற்குள் மாதவனுக்கு இருந்த நிலத்தில் பெரும் பாலானவை விற்கப்பட்டு விட்டன. வீட்டுச் செலவுக்குத் தக்க வருமானம் இல்லை. வீட்டில் செலவழிக்க நிறையப் பேர் இருந்தனர். தேடுவதற்கு யாரும் இல்லை. உட்கார்ந்து சாப்பிட்டால் ஊர் சொத்தே காணாதே! ஒருவர் சொத்துக் கட்டி வருமா?

"நிலம் போனாலும் போகட்டும்; வீடு போனாலும் போகட்டும்; என் எண்ணத்தை முடிக்காமல் இருக்கவே மாட்டேன்” என்னும் உறுதியுடன் மாதவன் கல்லூரியில் சேர்ந்தான். இரண்டு ஆண்டுகள் இராப் பகலாகச் சலியாது உழைத்து நுழைவுத் தேர்வுக்குச் சென்றான். அதில் ‘மாநில முதல்மாணவனாக வரவேண்டும்' என்பது அவன் ஆசை. ஆனால் இரண்டாவதாகவே வரமுடிந்தது. இருந்தாலும் தளர்ந்து போகவில்லை. இளங்கலைத் தேர்விலாவது முதல்வனாக வந்துவிடவேண்டும் என்று திட்டங்கட்டினான். இருந்த நிலமும் இதற்குள் விற்கப்பட்டுவிட்டது. வீடும் ஒத்திக்குப் போய்விட்டது. பிறர் உதவியை நாடுவதற்கும் முடியவில்லை. இந்நிலைமையிலே அரசாங்க உதவி தேடி வந்தது.

"மாதவன் மாநிலத்தில் மாநிலத்தில் இரண்டாவதாகத் தேர்ச்சி அடைந்ததைப் பாராட்டு முகத்தான் அவன் படிப்பு முடியும்வரை உதவித்தொகை வழங்கப்படும்” என்று உத்தரவாகியிருந்தது. மாதவன் கவலையெதுவுமற்றுப் படிப்பிலே ஆழ்ந்தான்.

66

வ்வளவு கூர்மையான அறிவாளியும் உண்டா? இவனே நன் மாணாக்கன்” என்று பாராட்டாத பேராசிரியர் இல்லை. அந்த அளவுக்குப் பாடங்களில் தேர்ச்சியும், பண்பில் உயர்வும் கொண்டிருந்தான் மாதவன். அவன் எதிர்பார்த்தபடியே இளங்கலைத் தேர்வில் மாநில முதல்மாணவனாகத் தேர்ச்சி யடைந்தான். அதற்காக, அவனைப் பார்க்கிலும் அவன் பயின்ற கல்லூரியே பெருமிதம் கொண்டது.

ஒருநாள். கல்லூரிப் பேராசிரியர்களும், மாணவர்களும் கூடி, மாதவனைப் பாராட்டியுரைத்துப் பரிசுகள் வழங்கினர். "மாதவனை மாணவனாகப் பெற்றதால் இக்கல்லூரி பேறு பெற்றது" என்று வியந்துரைத்தனர். இவ்வளவுக்கும் காரணம் பல்கலைக் கழகத் தலைவரே மாதவனைப் பாராட்டி எழுதி யிருந்ததுதான்.