பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

51

அதிகாரி நெருப்பாகி விட்டார். பரமனை உட னடியாக என்னென்னவோ செய்துவிட வேண்டும்போல் அவருக்கு இருந்தது. எதுவும் பேசாமல், குனிந்த தலை நிமிராமல் ஏதோ எழுதினார். "மறு உத்தரவு வரும்வரை நீ வேலைக்கு வர வேண்டாம்; நிம்மதியாக உறங்கு” என்று கூறி, தாளைப் பரமனிடம் எறிந்துவிட்டுத் தம் தனியறைக்குள் போய்விட்டார்.

பரமன் உதடுகள் துடித்தன. கண்கள் கலங்கின; பேச் வாயெடுத்தான! திடுமென ஏற்பட்ட உணர்ச்சியும், அதிகாரியின் முகக்கடுப்பும் பரமனைப் பேசவிடவில்லை. அடங்கிக் கிடக்கும் எரிமலைபோல் வீட்டுக்கு நடந்தான்.

வீடு சென்றும் பரமனால் அமைதியாக இருக்க முடிய வில்லை! அவன் எண்ணக் கோட்டை கள் என்ன ஆவது? பெரியசாமியின் வீட்டுக்குச் சென்று தன் நிலைமையைக் கூறிவிடுவது எனக் கருதினான். அவன் மானம் குறுக்கிட்டுத் தடுத்தது. "வேலையில்லை, போ! என்முன் நிற்காதே!" என்று சொன்னவர் முன் இந்தப் பெரிய பதவிக்காகப் பல்லைக்காட்டிக் கெஞ்ச வேண்டுமா?" என்று தோன்றியது. ஆனால் “அவர் வீட்டு வேலையா இது? நான் ஒரு சிப்பந்தி என்றால் அவரும் ஒரு சிப்பந்திதான்! வேண்டுமானால் கொஞ்சம் மதிப்பான சிப்பந்தி; இவ்வளவுதான் வேற்றுமை! நான், அதிகாரி அவர் என்னும் எண்ணத்துடன் அவரைப் பார்க்கப் போவது இல்லை. அவர் ஒரு மனிதர்; நானும் ஒரு மனிதன். மனிதரை மனிதன் சந்திப்பதிலே பேசுவதிலே - என்னக் குற்றம் இருக்கமுடியும்? வஞ்சமும் திருட்டும் செய்வதற்குத்தான் மானக்குறையுண்டு. உண்மையை, உரிமையைக் கேட்பதற்கு என்ன மானக்குறை?” என்று தன் நெஞ்சத்தைத் தேற்றிக்கொண்டு அதிகாரி வீட்டுக்கு நடந்தான் பரமன்.

“ஏன் இங்கு வந்தாய்? வெளியே போ! அலுவலகத்தில் தான் உன் தொல்லை என்றால் - வீட்டிலுமா? செய்வதெல்லாம் செய்து விட்டுப் பல்லைக் காட்டுவது பழக்கமாகிவிட்டது!” என்று பரமன் வீட்டு வாயிலுள் நுழைந்தும் நுழையாமலும் இருக்கும்போதே எரிந்து விழுந்தார் பெரியசாமி.

66

'ஐயா, நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். உங்களிடம் சால்லவேண்டியதைச் சொல்லிவிடுகிறேன். உங்கள் மனம் போல் செய்யுங்கள். மேல் அதிகாரி என்ற முறையிலே உங்கள் கடமையைச் செய்கிறீர்கள். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் நானும் மனிதன், நீங்களும்