பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. ஒரே ஒரு தூண்

பங்குனி மாதம்; கொடுமையான வெயில்; கால்களைத் தரையில் ஊன்ற முடியாத வெப்பம்; காற்றின் அசைவு சிறிதும் இல்லை; ஒரே புழுக்கம் வியர்வைக் காடு; ஒரு சிறுவன் எவற்றையும் பொருட்படுத்தாதவனாய் நடந்து வந்தான். அவன் இடுப்பிலே ஒரு வேட்டி; தலையிலே ஒரு துண்டு; தோளிலே ஒரு முடிச்சு - சோற்றுப் பொட்டலம்!

பதினைந்து கடந்திருக்காது வயது; அவன் முகத்தில் அழகுக் கோடுகள் சில கிடக்கின்றன. ஆனால் வறுமைச்சாயல் தன்னால் இயன்ற மட்டும் அழகுக் கோடுகளை மறைக்காமலும் விடவில்லை. ஒல்லியான உருவம்; பொது நிறம்; கனிவுடைய கண்கள்; ஆனால் எவற்றையும் ஊடுருவி நோக்கும் நுண்மை; சிந்தனையை வெளிக்காட்டும் முகம்; நீர்ப்பசையற்ற உதடுகள்; குவிந்து நீண்ட மூக்கு; நீண்டு தொங்கும் கைகள்; தளராத நடை!

அச்சிறுவன் - குமரவேல் - மதுரை அங்கயற்கண் அம்மை கோயில் வாயிலில் நுழைந்தான். நுழை வாயிலிலே மெல்லென்று வீசிய காற்று அவனைப் பேரின்பத்தில் ஆழ்த்தியது; நடைத்துயர் நொடிப் பொழுதில் பறந்தது. காலில் வெப்புக் கொப்புளங்கள் கூட ருந்தன. இருப்பினும் தண்ணென்ற காற்று அவற்றையும் மறக்கச் செய்தது. தன்னை மறந்து உறக்கம் தொடர ஆரம்பித்தது. ஓர் பக்கமாக இருந்த தூணில் சாய்ந்து உட்கார்ந்த வாறே உறங்கிவிட்டான். புரண்டு படுத்ததைக்கூட அவன்

அறியமாட்டான்.

66

பிற்பகல் மணி நான்கு இருக்கும். உறக்கம் சிறிது கலைந்தது. என்றாலும்; கண்ணை உடனே திறந்துவிட முடியவில்லை. லொட் லட் லொட் லட்” என்று பலவாக எழுந்த ஒலிகளும்; தள்ளு' தூக்கு, எடு, புரட்டு என்று எழுந்த குரல்களும் அரைகுறையாய் அவன் செவியில் விழுந்து கண்ணை திறக்கச் செய்தன. உற்று நோக்கினான். பெரிய வேலைத் திட்டம் ஒன்று நடைபெற்று வருவது புலனாயிற்று. எழுந்திருந்து ஒவ்வொரு தூணாகப் பார்த்தான். ஒரே ஒரு தூண்மட்டும் அவனை