பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

இளங்குமரனார் தமிழ்வளம் – 8

து

நெடுநேரம் நிற்கவைத்து விட்டது. மிக உன்னிப்பாக நோக்கினான். கழுத்து வலி பற்றிக்கூடக் கவலைப்படாமல் வரிவரியாகப் பார்த்தான்.

66

66

று

அருகில் வேலைபார்த்துக் கொண்டிருந்த சிற்பிக்கு சிறுவன் கலைத்திறன்” வியப்பாக இருந்தது. சிறுவனை நெருங்கி வந்து பையா! நெடுநேரமாக இத்தூணைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றாயே; காரணம் என்ன?” என் வினவினான். தூணில் வைத்த பார்வையை வாங்காமலே சிறுவன், “இத்தூணை நிறுத்தியவர் யார்?” என்று கேட்டான். 'இத்தூணை நிறுத்தக்கூடாதா?" என்று பதில் வினா விடுத்தான் சிற்பி. “சிற்பக்கலையின் முதற்பாடம் படித்திருந்தால் கூட இத்தூணை நிறுத்தியிருக்கமாட்டான்” - சிறுவன் இவ்வாறு சொல்வான் என்பதை எண்ணாத சிற்பி திகைத்துப் போனான். இதற்குள் இவர்கள் உரையாட லை அடுத்திருந்து கேட்ட திருமலை மன்னன் நெருங்கி வந்தான்.

66

66

'இளைஞனே! ஏதோ சொல்கிறாயே! அதை அறிந்து கொள்ளலாமோ?" என்று வினவினான். சிறுவன், மன்னவன் என்பதை அறிந்து கொண்டபடியால் “மன்னவ! இத்தூணை இவ்வாயிரக்கால் மண்டபத்தைவிட்டு அப்புறப்படுத்தியாக வேண்டும். குற்றமற்ற வேலைப்பாடுடைய இம்மண்டபத்தில் குறையுள்ள தூண் நிற்கத் தகாது” என்றான்.

66

இளைஞனே! தூணில் என்ன குற்றம் கண்டாய்?"

மன்னன் மொழி இது.

இதனை நிறுத்திய சிற்பி எவ்வளவோ வேலைத் திறமும், நுட்ப அறிவும் உடையவன்தான் எனினும் “யானைக்கும் உ அடிசறுக்கும்” என்னும் முதுமொழிக்கு இணங்க அவன் செயல் ஆயிற்று. தண்ணீர் கொண்டு வந்தால் இத் தூணிலுள்ள குறையை எடுத்துக் காட்டுகின்றேன்' - சிறுவன் அமைதியும், பணிவும் கலைத்தெளிவும் தோன்றுமாறு பேசினான்.

தண்ணீர் குடம் குடமாக வந்தது. குமர வேல் கூறியவாறு நீர்க்குடத்தைத் தூண் முழுவதும் நனையுமாறு கவிழ்த்தான் ஒருவன். மேலும் மேலும் பல குடங்கள் கொட்டிக்கொண் டிருந்தான். ஒரே ஓர் இடத்தில் மட்டும் ‘வட்டமான ஒரு பகுதி’ விரைவில் காய்ந்து கொண்டு வந்தது. நொடிப் பொழுதில் அப்பகுதியில் நீர்ப் பசை அற்றுப்போவதைக் கண்டவர்கள் திகைத்தனர். "இது என்னே விந்தை?” என்றனர். தூணை