பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

59

நிறுத்திய சிற்பி சேந்தன் சிறுவன் குமரவேல் முன் மண்டி யிட்டான்.“இளைஞனே! உன் கலையுணர்வுக்கு என் கலையுணர்வு கால் பங்கும் ஆகாது. இந்த இளம் வயதிலேயே பேரறிவு கைவரப்பெற்ற உனக்கு உயரிய எதிர்காலம் உண்டு. உன்னைப் பெற்றவர்கள் உண்மையில் பேறு செய்தவர்களே' என்று வாழ்த்தினான். குமரவேலால் சிறிதும் பேச முடியவில்லை. தலைதாழ்ந்து நாணத்தால் நின்றான். பலருக்குத் தூணிலுள்ள குற்றம் புலப்படவில்லை. குமரவேல் கூறினான்.

66

'அரசே! தூணில் நீர்ப்பசையின்றிக் காணும் பகுதி யிலே தேரையிருக்கின்றது. காற்றும் நீரும் புகும் அளவுக்கு மென்மை இருந்தாலன்றிக் கல்லில் தேரை பிறந்து உயிர் வாழ முடியாதல்லவா! இத்தகைய வலுவற்ற கல்லை நிறுத்துவது தகுமா?” என்று கூறிக்கொண்டே சுத்தியல் ஒன்றால் அப் பகுதியில் தட்டினான் தேரை துள்ளி வீழ்ந்து தத்திச் சென்றது. கூடியிருந்தோர் குமரவேலைத் தூக்கியும் தழுவியும் இன்புற்றனர். மன்னவன் அவன் முதுகை அன்பால் தடவித் தந்தான்.” சிறுவ! நீ யார்? இளைஞனான நீ எதிர்காலத்தில் சிற்பிகள் போற்றும் சிற்பியாவாய் என்பதில் ஐயமில்லை. உன் பெற்றோர் யாவர்?" என்றான்.

குமரவேல், தாய் மட்டுமே தனக்கு உள்ளார் என்றும், தான் பிறப்பதற்கு முன்னரே தந்தையார் இறந்துவிட்டார் என்றும் சொன்னான். “இளம்பெருஞ் சிற்பியே! நீ உன் தாயை நீ இங்கு அழைத்துவர இயலுமோ? உன்னைப் பெற்றெடுத்த அந்தப் பேரன்னையைக் காணப்பெற்று எங்கள் மகிழ்ச்சியைத் தரிவிக்கவேண்டும்” என்றான் அருங்கலை மன்னனாம் திருமலை மன்னன்.

மன்னன் நன்மொழி கேட்ட குமரவேலால் நம்ப முடியவில்லை. பஞ்சைச் சிறுவனைப் பாராள் வேந்தன் பாராட்டிப் பேசிப் புகழ்வது என்ன எளிதில் கிடைக்கக் கூடியதா? எல்லோர் வாழ்விலும் நிகழக்கூடியதா? “நமக்கா இவ்வளவு பெருமை?” என்று உள்ளம் விம்மினான். அரசன் அளித்த கொடைகளைப் பெற்றுக்கொண்டு சிறப்புடன் ஊரையடைந்தான். சிற்பிகள் போற்றும் சிற்பியல்லவா அவன்!

பழைய குமரவேலா?

குமரவேல் தன் தாயினிடம் நடந்தது எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் கூறினான். அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவும் உண்டோ? உச்சி முகர்ந்து உள்ளூற வாழ்த்தி அணைத்துக்