பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. மானமுள்ள பிச்சைக்காரன்

“பிச்சைக்காரப் பயலுக்கு எவ்வளவு மமதை பார்! அப்பன் தான் குருட்டுப் பயல்; மகனும் அப்படியா ஆகவேண்டும்; தடியன் ப்படிப் பொழிந்து தள்ளினான் பூவண்ணன்.

-

குழந்தைவேலால் இதனைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. “டே! என்ன சொன்னாய்? என்னை ஆயிரம் வேண்டுமானாலும் ஏசு! என் அப்பாவைச் சொல்ல நீயார்?” என்று குமுறினான். கையைத் தூக்கிக் கன்னத்தில் ஓங்கி அறையவும் தொடங்கினான். ஆனால் சட்டென்று கையைச் சுருக்கித் தன் கன்னங்களிலே இரண்டு போட்டுக்கொண்டு, அமைதியாகப் போய் உட்கார்ந்தான். அன்று முழுவதும் அவன் முகத்தில் களையே இல்லை. அழுகையும் கண்ணீருமாகவே வேளையைக் கழித்தான். அவன் உள்ளக் கொதிப்பைக் காட்டுவது போன்று கண்களும் சிவந்துவிட்டன; கன்னங்கள் வீங்கிவிட்ட ன.

குழந்தையின் நண்பன்தான் பூவண்ணன். அவனுடன் ஒரே பலகையில் இருப்பவர்களுள் பூவண்ணனும் ஒருவன். ஐந்தாறு பேர்கள் இருக்கும் நெடும் பலகையில் நடுவே இருப்பவன் மற்றவர்களைத் தாண்டிக்கொண்டு போகும் பொழுது கால் பட்டுவிட்டதா, என்ன? இப்படிக் கால் பட்டதற்காகத்தான் குழந்தையை வசைமாரி பொழிந்தான் பூவண்ணன். குழந்தை மிகுந்த பொறுமைக்காரன். இருந்தாலும் அவன் தன் தந்தையைத் திட்டியதைச் சிறிதும் பொறுக்க முடியவில்லை; அஃது இயற்கைதானே!

மாலையில் பள்ளிக்கூடம் முடிந்தது. சோர்ந்து தளர்ந்த நடையுடன் குழந்தை நடந்தான். பூவண்ணன் அவனைத் அ தொடர்ந்தான். “குழந்தை! நான் அறியாமல் சொல்லிவிட்டேன். நான் சொல்லியது தவறுதான்; அதை உணர்ந்து கொண்டேன். பொறுத்துக்கொள்ள மாட்டாயா?” என்றான்.

66

என்னைத் திட்டியது பற்றிக் கவலையில்லை. நான் மிதித்தது உனக்குத் தவறென்று தோன்றினால் என்னைத்தானே