பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

67

மாலை ஐந்து மணி இருக்கும். இரயிலில் இருந்து நடுத்தர வயதுள்ள ஒருவர் ஒரு தோற்பையுடன் நடந்து வந்தார். “கூலி கூலி” என்று சொல்லிக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்தான் குழந்தை. “பையா! சுமை சிறிதுதான். கூலி வேண்டாம்." என்றார். "ஐயா, நீங்கள் கொடுப்பதைக் கொடுங்கள் ஐயா; நான் தூக்கிக் கொண்டு வருகிறேன். இன்று நீங்கள் கூலி தந்தால் ஒரு குடும் பத்தைப் பிச்சைக்காரர் ஆக விடாது தடுத்த பெருமை உங்களைச் சேரும்" என்றான். குழந்தையின் கண்களிலே நீர் சுரந்து நின்றது. இரக்கமுடைய வழிப்போக்கர் குழந்தைவேலை நோக்கினார். அவருக்கும் சிறுவன் சொல்லைக் கேட்டு உதவவேண்டும் போல் இருந்தது. அவர் “பையா, இதனை எடுத்துக்கொண்டு வந்தால் உனக்கு என்ன கூலிதான் கிடைத்துவிடும். உன் குடும்பத்தைக் காப்பாற்றிவிடுவாய்?" என்றார்.

66

"ஐயா எவ்வளவு கிடைத்தாலும் சரி; கவலையில்லை. என் தந்தை குருடர். பிச்சையெடுத்துப் பிழைத்துக் கொண்டு என்னையும் வளர்த்தார். அது மானக்கேடான வாழ்வு என்று அவரைப் பிச்சை எடுக்க விடாமல் தடுத்துச் சுமை தூக்கிச் சம்பாதித்தாவது பிழைப்போம் என்று உறதி சொல்லிவிட்டு இன்றுதான் வந்தேன். இதுவரை சல்லிக் காசு கூடக் கிடைக்க வில்லை. வாயைக் கட்டி வயிற்றைக் கட்டிச் சேர்த்து ஒரு ரூபாய் சேர்த்துவிட்டால் போதும்! பிழைத்துக்கொள்வோம். என்னை வேண்டி இந்தச் சுமையைத் தூக்குவதற்கு அனுமதியுங்கள் என்றான் குழந்தை.

'சரி! ஒரு ரூபாய் கிடைத்தாலும் போதும்; பிழைத்துக் கொள்வாய்; பிச்சை எடுக்கமாட்டாய்! அப்படித்தானே பெரியவர் கூறினார்.

“ஐயா! என்னை நம்புங்கள். உண்மையாகச் சொல்கிறேன். திருக்குறள் மேல் ஆணையிட்டு சொல்கிறேன். ஒரு ரூபாய் சம்பாதித்துவிட்டால் போதும்! பிச்சை எடுக்கமாட்டோம்; கூலியும் சுமக்கமாட்டேன்.” என்றான் - அவன் கண்ணில் சுரந்து நின்ற நீர் கன்னத்தின் வழியே வழிந்தன.

அருள் கனிய ஒரு பார்வை பார்த்தார் வழிப்போக்கர். புன்முறுவலுடன் “இந்தா ஒரு ரூபாய்; நன்றாகப் பிழைத்தால் போதும்; உன் முன்னேற்றத்தை முகம் காட்டுகின்றது என்றார்! ஒரு ரூபாயா ஐயா, எனக்கா?” வியப்புடன் கேட்டான் குழந்தைவேல். "ஆம்; போய் வா" என்று நடந்தார் பெருந்தன்மை

66