பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

இளங்குமரனார் தமிழ்வளம் 8

எரிந்து கொண்டிருந்தபடியால் வெளிச்சம் தெரிந்தது. தாளின் மடிப்பு சுருக்கங்களையெல்லாம் நிமிர்த்தி வைத்துப் படித்தான். ஒருமுறை இருமுறைகளல்ல - பன்முறைகள் படித்தான். படிக்கப் படிக்க அவனுக்கு அதற்குமுன் இருந்த ஊக்கம், உறுதியெல்லாம் பறந்தன. அவனால் உட்கார்ந்திருக்க முடியவில்லை. மீண்டும் படுக்கைக்குச் சென்றான். உறங்காமல் உறங்கினான்.

மாயாண்டிக்கு வயது பதினைந்து ஆக இருக்கும்போது, அவன் அப்பா குதிருள் இறங்கி நெல் அள்ளித் தருமாறு சொன்னார். அள்ளித் தந்துவிட்டுக் குதிரின் மேலிருந்தவாறே கீழே குதித்தான் மாயாண்டி. விளக்குத் தூக்குவதற்காக மாட்டி வைத்திருந்த கம்பியில் அவன் வலக்கண் மாட்டிக் கொண்டு கிழிந்து விட்டது. இமை நெடுந்தொலை வாராகக் கிழிந்து போயிற்று. அப்பப்பா! அப்பொழுது அவன் பட்ட துன்பத்தை இப்பொழுது நினைத்தாலும் கொடுமையாக இருந்தது. அஞ்சாத எனக்கே கண்ணிமை இழந்த அந்நிகழ்ச்சி அவ்வளவு அல்லல் தந்தது என்றால் இந்தப் பயங்கொள்ளிக் காக்கை வலி முனியாண்டிக்குக் கண்ணைத் தோண்டி விடுவது எப்படி இருக்கும்? விடியும் வரை உயிரோடு இருப்பானோ? செத்துத் தொலைந்து விடுவானோ...” இப்படி மனம் விட்டுக் கலங்கினான். 'எப்படிக் கண்ணயர்ந்தான்' என்பது தெரியாமல் உறங்கி விட்டான். விடிந்து மணி ஆறேமுக்கால் ஆகிவிட்டது.

66

முனியாண்டியை ஒரு குகைக்குக் கொண்டு போயினர்; ஒரு தூணிலே கட்டி வைத்தனர். குத்துக்கம்பி உலையிலே காய்ந்துகொண்டு இருந்தது. மாயாண்டி வரவேண்டும்; மணி ஏழும் ஆக வேண்டும். இதற்காகக் காத்திருந்தினர். மாயாண்டி குகைக்கு வந்தான். வந்தான். இருந்தவர்கள் இருந்தவர்கள் ஆரவாரத்துடன் வேற்றனர்.

66

வர

எனக்காக முனியாண்டியை மன்னித்துப் போகச் சொல்லி விடுங்கள்; தவறாக இருந்தாலும் இருக்கட்டும்; இது குற்றம் என்றால் அக்குற்றம் என்னையே சாரும்" என்றான் மாயாண்டி. "ஏதோ காரணம் இருக்கும்” என்று எவரும் மறுக்கவில்லை. மாயாண்டி பேசினான். “இந்த விடுதலை நான் தந்த விடுதலையன்று; இது வள்ளுவர் தந்த விடுதலை”

66

“இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல்