பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

இளங்குமரனார் தமிழ்வளம் 9

மறைக்க முடியாது. அப்படி மறைத்தாலும் அவன் நெஞ்சையுமா மறைத்து விட முடியும்? நெஞ்சை ஒழித்த வஞ்சகம் உண்டா? நெஞ்சுக்கு இணையான சாட்சி உண்டா? நெஞ்சே, உள் நின்று சிரிக்கும்.

புறஞ் சொல்லைக் கேட்பவர் காது செவிடா? அவர்கள் பிறரிடம் கூறா ஊமரா? அடுத்தவர் உறங்கினாலும் கதவைத் திறந்து, தட்டி எழுப்பி இன்னார் இன்னபடி உங்களைச் சொன்னார் என்று சொன்னால் தான் வயிறு நிறைந்ததாக, அன்றைத் திருப்பணி இனிது நிறைவேறியதாக மகிழ்பவர்கள் புறஞ் சொல்லாக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது. தொடர்புடையவனே - தான் புறங் கூறியதைப் பிறர் அறிந்தபின் நாணி நிற்க வேண்டியவனே - துணிந்து சொன்னால் சூறைக் காற்றாக -அறையும் பறையாக - இருப்பவன் விடுவானா? அம்மி பறக்கும் ஆடிக் காற்றில் எச்சில் இலை எம்மாத்திரம்?

புறங் கூறுபவர்க்கு 'மூத்தவரே' புற எழுத்தர்! இப்படி ஒருவர் உளரா?

அறத்திற்குப் புறம்பான வழியிலே எழுதுபவர் புற எழுத்தர் தானே! வலக்கையிற்குப் பதில் இடக்கையால் எழுதுவது, எவன் பேரிலோ கையெழுத்திட்டு எழுதுவது, பெயர் எழுத வீரமில்லாமல், வீர முழக்கங்கள் காட்டி எழுதுவது - ஆம்! மொட்டைக் கடிதங்கள், முரட்டுக் கடிதங்கள், முறைகெட்ட கடிதங்கள் என்றெல்லாம் பட்டங்கள் பெறுமே அக் கடிதங்களை எழுதுவது - அதனால் எவன் குடியையாவது கெடுப்பது இத்தொண்டு செய்யும் பெரியவரே புற எழுத்தர்! இப்புற எழுத்துத்தான் புறஞ்சொற்பூனை பெற்றுவிட்ட புலிக்குட்டி! தாய் எட்டடி தாவினால், குட்டி பதினாறு அடி தாவாதா?

-

புறச் சொல்லையும், புற எழுத்தையும் சொல்லுபவர்களும் எழுதுபவர்களும் போகட்டும்; கேட்டுத் தொலைக்கிறார்களே! நம்பித் தொலைக்கிறார்களே! இவர்கள் தாம், உண்மையாக நேர்முக உரைக்குப் பாடை கட்டுபவர்! இவர்கள் செவிசாய்த்து, பல் காட்டிக் கேட்காவிட்டால் எவனாவது புறங்கூறுவானா?

உங்களை இன்னான் இன்ன இன்னபடியெல்லாம் திட்டினான் என்று ஒருவன் மன்னனிடம் சொன்னானாம்! பரிசும் பாராட்டும் கிடைக்கும் என்பது அப்புறஞ்சொற் புன்மகன் எண்ணம். மன்னன் சொன்னானாம்;, அவனோ என் காதுக்குக் கேட்காமல் சொன்னான் "இவனே நேருக்கு நேர்